என்னடி கொஞ்சிட்டு இருக்க! கள்ள காதல் விவகாரம்!

0
159

கணவன் பேச்சை கேக்காமல் மனைவி கள்ள காதலனுடன் பழகி வந்ததால் ஆத்திரமடைந்த கணவன் கள்ள காதலனை கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் ஜவகர்லால் தெருவை சேர்ந்தவர்கள் ரவிச்சந்திரன்- காமாட்சி தம்பதியினர். ரவிச்சந்திரன் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் பதினோரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் காரை கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்ற இளைஞருடன் காமாட்சிக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. ரவிச்சந்திரன் எத்தனை முறை சொல்லியும் காமாட்சி தினேஷ் உடனான உறவை முறித்துக் கொள்ளவில்லை.

கடந்த 10 நாட்களுக்கு முன் தினேஷ் உடன் தனியாக சென்று பின் இருவரும் வீடு திரும்பி விட்டு காரை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் முன் உள்ள திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளனர்.

அதை பார்த்த ரவிச்சந்திரன் ஆத்திரமடைந்து என்னடி இங்க கொஞ்சிட்டு இருக்க என்று சொல்லி காமாட்சியை அடித்து விட்டு தினேஷை அருகில் இருந்த கட்டையால் ஓங்கி அடித்து கொன்றுள்ளார். பின் ரவிச்சந்திரன் ஜேசிபி வாகனத்தில் தினேஷின் உடலை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த ஏரிக்கரை ஒன்றில் குழிதோண்டி புதைத்துள்ளார்.

தானாகவே நேற்று காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். பின் என்ன நடந்தது என்ற சம்பவம் குறித்து போலீசாரிடம் கூறியுள்ளார்.

இதனை அடுத்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின் போலீசார் அங்கு புதைக்கப்பட்ட தினேஷின் உடலை தோண்டி எடுத்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.