உறவாடிக் கெடுத்த திமுக! அமைச்சர் சிவி சண்முகம் விமர்சனம்!

0
136

மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அரசாணை வெளியிட்ட பின்பு நான் தான் கிடைத்தது என்று பெருமை பேசியது போன்று ஆன்லைன் ரம்மி விவகாரத்திலும் ஸ்டாலின் அரசியல் செய்து வருகின்றார். என்று சிவி சண்முகம் குற்றம் சாட்டியிருக்கிறார்.

விழுப்புரத்தில் அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது இணையதள லாட்டரியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வந்திருக்கின்றது.
இது சம்பந்தமாக அரசு பரிசீலனை செய்து வருகின்றது ஏற்கனவே ஜெயலலிதா தான் லாட்டரியை தடை செய்தார்.

ஆனால் தினமும் ஒரு அறிக்கையை விட்டு அறிக்கையில் அரசியல் செய்யும் ஸ்டாலின் இணையதள ரம்மி விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என அக்கறையாக கேட்கின்றார்.

இதனைக்கேட்க அவருக்கு உரிமை கிடையாது என்று விமர்சனம் செய்து இருக்கின்றார் சிவி சண்முகம்.

லாட்டரியை தடை செய்த பின்னரும் 2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்பு திமுக கோயமுத்தூரில் செம்மொழி மாநாடு நடத்திய போது லாட்டரி அதிபரோடு உறவாடியது இணையதள லாட்டரி தொடர்பான வழக்கு கடந்த திங்கட்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது அரசின் பரிசீலனையில் இருக்கிறது என வழக்கறிஞர் மூலம் தெரிவிக்கப்பட்டது என்று சிவி சண்முகம் தெரிவித்திருக்கின்றார்.

Previous articleஎன்னடி கொஞ்சிட்டு இருக்க! கள்ள காதல் விவகாரம்!
Next articleஅமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் ஜோ பைடன் சாதனை!