7 பேர் விடுதலையில் திமுகவுக்கு அக்கறை இல்லை அவர்களை விடுதலை செய்ய தீர்மானத்தை நிறைவேற்றியது அதிமுக அரசுதான் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, இணையதள ரம்மி விளையாட்டை ரத்து செய்ய அரசுக்கு கோரிக்கைகள் வந்து கொண்டிருப்பதால் அனைத்து இணையதள சூதாட்ட விளையாட்டுக்களையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் இணையதள சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கும் முடிவு செய்யப்பட்டு இருக்கின்றது என்று தெரிவித்தார் முதல்வர்.
7 பேர் விடுதலைக்காக உண்மையான அக்கறையுடன் குரல் கொடுத்து தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம் 7 பேர் விடுதலையில் எதிர்க்கட்சிக்கு அக்கறை இல்லை அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று நாங்கள்தான் தீர்மானத்தையும் நிறைவேற்றினோம்.7 பேர் விடுதலையில் ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய நிலை இருக்கின்றது.
விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக வெளியான தகவலில் குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்தியாவில் கட்சி ஆரம்பிக்கும் உரிமை அனைவருக்கும் இருக்கின்றது என்று தெரிவித்த முதல்வர் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், யாத்திரைக்கு அனுமதி வழங்க இயலாது என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்.
நீலகிரி, திருப்பூர், ஆகிய நகரங்களில் கோரோணா பணிகள் சம்மந்தமாக முதல்வர் ஆய்வு செய்ய இருக்கின்றார்.கோவை மாவட்ட பொதுமக்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
உக்கடம் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது கவுண்டம்பாளையம் சந்திப்பில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பால பணிகள் நடந்து வருகிறது என்று கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.