தமிழகத்தின் சிற்பி என ஸ்டாலின் புகழ்ந்த! அந்த நபர் யார் தெரியுமா!

0
125

துறைமுகம் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை மாற்றி அமைத்து ஈரோட்டிற்கு பாலம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார்.

அந்த அறிக்கையில் தமிழக உள்கட்டமைப்பில் சிற்பி தலைவர் கலைஞர் ஆட்சி காலத்தில் மதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

1815 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்ட 19 கிலோமீட்டர் தூரத்திற்கான இந்த திட்டத்தை அதிமுக ஆட்சியில் அம்மையார் ஜெயலலிதா முடக்கி வைத்திருந்தார். இப்போது அதனை 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இரண்டடுக்கு மேம்பாலம் ஆக மாற்ற இருப்பதாக, அறிவிப்பு வெளியாகி இருக்கின்றன.

பறக்கும் சாலை திட்டத்திற்கு ஏற்கனவே மேம்பாலம் அமைப்பதற்காக தூண்கள் அமைக்கப்பட்டு இருக்கும் நிலையில், இரண்டடுக்கு மேம்பாலம் என்பது அதனுடைய கட்டுமானத்தை முற்றிலுமாக மாற்றி அமைத்துக் கொள்ள காலதாமதம் ஏற்படும் அறிவிப்பாக இருக்கின்றது.

பறக்கும் சாலை திட்டத்தை அவன் வழியிலேயே தொடர அனுமதிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி தெற்கு மாவட்ட கழக செயலாளர் மா சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில், மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

அதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் பறக்கும் சாலை திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் அதனை விரைவாக நிறைவேற்ற காலம் வேகமாக வருகின்றது, என்பதை பொது மக்கள் நன்றாகவே அறிவார்கள் என்று தெரிவித்து இருக்கின்றார்.

Previous articleகுஷ்புவின் கருத்தால் அதிர்ச்சிக்குள்ளான ஆளும் தரப்பு! கூட்டணியில் விரிசலா!
Next articleஅமைச்சர் உதயகுமார் ஊழல் விவகாரத்தை கிழித்து தொங்கவிட்ட எதிர்க்கட்சித் தலைவர்! மிகுந்த அவமானத்தில் தலை குனிந்த அமைச்சர்!