வேல் யாத்திரை! எல்.முருகன் மீது பாய்ந்தது மேலும் ஒரு வழக்கு!

0
125

தடையை மீறி வேல் யாத்திரையில் பங்குபெற்ற பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் அவர்கள் மீது ஓசூரில் வழக்குப்பதிவு செய்து தருகின்றது.

கடந்த ஆறாம் தேதி திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை வேலி யாத்திரை நடைபெறும் என்று பாஜக சார்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்க நிலையிலும், தடையை மீறி சென்னையிலிருந்து கிளம்பி சென்றார் வேல்முருகன் திருத்தணியில் முருகனை வழிபட்ட பின்பு யாத்திரையில் பங்கேற்க முயற்சிசெய்த எல். முருகன் உள்பட பாஜகவினர் அனைவரையும் தமிழக அரசு தடை விதித்து தடுத்து நிறுத்தினாலும் ,யாத்திரை தொடரும் என்று பாஜகவினர் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதுகுறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் உத்தரவை பெறாமல் யாத்திரை நடத்துவதற்கு முயற்சி செய்தது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

இந்த மாதம் 30ஆம் தேதி வரை யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக, தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதோடு தவறான ஒரு செயலை நியாயப் படுத்தும் முயற்சியில் ஈடுபடவேண்டாம், என்று பாரதிய ஜனதா கட்சியினருக்கு கண்டனம் தெரிவித்தனர் நீதிபதிகள்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அனுமதி வாங்காமல் வேல்யாத்திரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முயற்சி செய்த, எல். முருகன், அண்ணாமலை, உள்பட 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

ஓசூரில் இந்த யாத்திரைக்கு தடை விதிக்கப்படுவதாக நேற்றையதினம் டிஜிபி சார்பாக,நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleவேலை! வேலை! வேலை! Bank வேலை! உடனே Apply பண்ணுங்க!
Next articleபொது மக்களிடம் சிக்கிய திமுக எம்எல்ஏ! என்ன செய்தார்கள் தெரியுமா ஸ்டாலின் அதிர்ச்சி!