மாணவர்களே உஷார்..! நாளையே கடைசி நாள்!

0
268

மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்ய நாளையே கடைசி நாள் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். அந்தவகையில் நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்த கட்டமாக மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்கம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி கடந்த 3ம் தேதி முதல் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 24,420 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,742 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 17,816 மாணவ-மாணவிகள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 9,086 மாணவ-மாணவிகள் என மொத்தம் 38,162 மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பியிருப்பதாக மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், விண்ணப்பங்களை பதிவு செய்து முறையாக அனுப்புவதற்கு நாளையே (நவ. 12) கடைசி நாள் ஆகும். இதையடுத்து மருத்துவக்கல்வி படிப்புக்கான தரவரிசை பட்டியல் வருகிற 16ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. இதற்கிடையில் மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleஅதிமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பால் பரபரப்பு! அதிருப்தியில் கூட்டணிக் கட்சிகள்!
Next articleசுகாதாரத் துறையுடன் டாக்டர் வீட்டில் சோதனை நடத்திய எம்.பி! கடைசியில் உண்மை தெரிந்த அவலம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here