திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அருகே கள்ள காதலுக்கு தடையாக இருந்த இராணுவ வீரரான கணவனை கொலை செய்ய முயன்ற கள்ள காதல் ஜோடி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகே உள்ள பல்பந்தம் என்ற கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினர் விநாயகமூர்த்தி. அவர் வயது 40. விநாயகமூர்த்தி ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பெயர் வானதி.இவரின் வயது 31.இவர் இருவர்களுகும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் வானதிக்கு மரிமாணி என்ற குப்பதை சேர்ந்த ஜெயகுமார்(28) என்று இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஜெயகுமார் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இது நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது. இருவரும் ஜாலியாக ஊர் சுற்றி வந்துள்ளனர்.
திடீரென்று இராணுவத்திற்கு சென்ற விநாயகமூர்த்தி விடுமுறை காரணமாக திரும்பி வந்துள்ளார். இதனால கள்ள காதலர்கள் சந்திக்க முடியாமல் போனது. இருவரும் சந்திக்க முடியாததால் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்துள்ளனர்.
ஒரு நாள் ஜெயக்குமார் சந்திக்க வேண்டும் என்று கூற வானதி அதை மறுத்துள்ளார். அதற்கு வானதி என் புருஷன் ஊருக்கு வந்துவிட்டார். இனிமேல் சந்திக்க முடியாது என சொல்லி மறுத்து உள்ளார். இருவருக்கும் இடையில் செல்போனிலேயே சண்டை வந்துள்ளது. இதை தொடர்ந்து பார்த்து கொண்டிருந்த விநாயகமூர்த்தி வானதியிடம் யாருடன் பேசி கொண்டிருக்கிறாய் என்று கேட்க கணவன் மனைவி இருவருக்கும் இதனால் சண்டை வந்துள்ளது. இதனால் கோபம் அடைந்த வானதி கள்ளக்காதலன் ஜெயக்குமாருக்கு போன் செய்து வீட்டிற்கு வர சொல்லி கொல்ல திட்டமிட்டுள்ளனர்.
இரவு 11 மணி அளவில் வீட்டில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த விநாயகமூர்த்தியை வானதியும் ஜெயக்குமாரும் சேர்ந்து தலையணையால் விநாயகமூர்த்தியின் முகத்தில் அழுத்தி கொலை செய்ய முயற்சி செய்துருக்கிறார்கள்.
இதனால் மூச்சு திணறல் விநாயகமூர்த்திக்கு ஏற்பட்டுள்ளது. உடனே விநாயகமூர்த்தி ஜெயக்குமாரின் கையை பிடித்துள்ளார். வலி பொறுக்கமுடியாமல் ஜெயகுமார் தப்பி ஓட்டம் பிடித்துள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து விநாயகமூர்த்தியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
விநாயகமூர்த்தி போலீசில் இருவர் மீதும் புகார் அளித்துள்ளார். இதனால் வானதியை போலிசார் விசாரித்து உள்ளனர். வானதி உண்மையை சொல்லி சரணடைந்து உள்ளார். ஜெயகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.