என் புருஷனும் தம்பியும் தான் இப்படி பண்ண சொன்னாங்க! அது கொஞ்சம் என்னனு பாருங்க!

Photo of author

By Kowsalya

என் புருஷனும் தம்பியும் தான் இப்படி பண்ண சொன்னாங்க! அது கொஞ்சம் என்னனு பாருங்க!

Kowsalya

ஃபேஸ்புக் மூலம் காதலித்த பெண்ணை நேரில் பார்க்க சென்ற காதலனுக்கு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞர். இவருக்கு 30 வயதாகிறது. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி உள்ளது. ஆனால் ஃபேஸ்புக்கில் அனுஷியா என்ற அழகான பெண்ணின் படத்தை பார்த்து அந்த பெண்ணிற்கு பிரென்ட் ரெக்வெஸ்ட் கொடுத்துள்ளார். அந்த பக்கம் இருந்தும் ப்ரெண்ட்

ரெக்வஸ்ட்டை ஏற்று இருவரும் பேசி பழகி வந்துள்ளனர். இவருக்கு திருமணம் ஆனதை மறைத்து உள்ளார் இந்த இளைஞர்.

ஒரு கட்டத்திற்கு மேல் ஃபேஸ்புக் பக்கத்தில் அந்த பெண்ணின் நம்பரை எடுத்து போனில் தனது காதலை வளர்த்துள்ளர். அந்த பெண்ணும் அந்த இளைஞருடன் ஆசையாக பேசி அவ்வப்போது பணம் வாங்கியுள்ளார் என தெரிகிறது. இப்படியாக அந்த இளைஞர் அந்த பெண்ணிற்கு 3 லட்சம் வரை பணம் கொடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேரில் சென்று காதலியை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு உள்ளார் அந்த இளைஞர்.

இவரும் அந்த பெண்ணை பார்க்க திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாமணி மேட்டுத்தெருவில் உள்ள அனுசியா வீட்டுக்கு சர்ப்ரைஸ் ஆக இருக்க வேண்டும் என நிறைய பரிசை வாங்கி சென்றுள்ளார்.

அங்கு சென்ற பார்த்த பொழுது தான் அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இத்தனை நாளாக அவரது காதலி இளம்பெண் என்று நினைத்த பேசி வந்த இளைஞருக்கு அணுஷியா ஒரு இளம்பெண் அல்ல. ஒரு 40 வயது நிறைந்த ஒரு பெண் என தெரிய வந்துள்ளது.

இரண்டாவது அதிர்ச்சி என்னவென்றால், பேஸ்புக்கில் இருந்தது அந்த பெண்ணின் நிஜ புகைப்படம் இல்லை. அந்த புகைப்படத்தில் இருந்தது அனுஷ்யாவின் பக்கத்துக்கு வீட்டு இளம் பெண்ணுடைய புகைப்படம். இந்த சம்பவம் குறித்து பக்கத்துக்கு வீட்டு பெண்ணின் குடும்பத்தினரிடம் நடந்த சம்பவம் குறித்து விவரித்துள்ளார்.

இந்த தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண்ணின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அனுஷ்யாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

போலி ஃபேஸ்புக் பக்கம் மூலம் காதலித்து நடித்து பணம் பறிக்க சொல்லி அனுஷ்யாவுக்கு ஐடியா கொடுத்ததே அந்த பெண்ணின் தம்பிதான் என்று அவர் வாக்கு மூலம் அளித்துள்ளார். அதற்கு அந்த பெண்ணின் கணவரும் உடந்தையாக இருந்துள்ளார்.