திடீரென்று இலங்கையில் அதிரடி அறிவிப்பு – இனி இதை செய்தால் குற்றமாம்!

0
132

இலங்கையில் செய்தியாளர்களை சந்தித்த போலீஸ் டி.ஐ.ஜி. அஜித்ரோஹணா, அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளார். அது என்னவென்றால் இனி இலங்கையில் பிச்சை  கேட்பதும் மற்றும் பிச்சை வழங்குவதும் தண்டனைக்குரிய குற்றம் என்று கூறியுள்ளார்.

அதாவது, இலங்கையில் உள்ள கொழும்பு உள்பட சில முக்கிய நகரங்களில் சிலர் பொது மக்களிடம் வர்த்தக நோக்கத்தில் பிச்சை  எடுக்கிறார்களாம். இவ்வாறு தவறான நோக்கத்துடன் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

தினசரி சம்பளம் அடிப்படையில் பலர் பிச்சை எடுத்து வருவதாக சுட்டிக் காட்டியவர் இவர்களால் கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதாகவும் சிக்னல்களில் இவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் நடந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். 

அதனால் கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிச்சை எடுப்பதும், பிச்சை வழங்குவதும் குற்றம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு குறிப்பிட்டுள்ள இந்த பகுதிகளில் பிச்சை எடுப்பவர்கள் மீதும் வழங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில முக்கிய காரணத்தினால் இலங்கை அரசு, “குறிப்பிட்ட பகுதிகளில் பிச்சை எடுத்தாலும், பிச்சை வழங்கினாலும் தண்டனை அளிக்கப்படும்” என்று அறிவித்துள்ளது.

Previous articleமுக்கிய மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு முறை – எங்கு தெரியுமா?
Next articleகட்டம் கட்டிய ஸ்டாலின்! புஸ்வானம் ஆக்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!