நடிகர் லிவிங்ஸ்டன் மகள்தான் நம்ம பூவே உனக்காக சீரியல் கீர்த்தி. இவரது பெயர் ஜோவிட்டா. சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பூவே உனக்காக சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஜோவிட்டா. இந்த சீரியல் மக்களிடையே மிகவும் பேசப்பட்டு வருகிறது. இதில் இவருக்கு கடந்த கால நினைவுகள் மறந்து இவர் செய்யும் குறும்புத்தனமும் மற்றும் இவர் பேசும் சென்னை பாஷையும் மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஜோவிட்டா நடிகர் லிவிங்ஸ்டன் மகள். இவர் அம்பிகாவின் மகனான ராம்கேசவ் ஹீரோவாக அறிமுகமான படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளியாகாத நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக சீரியலில் நடித்து வந்தார்.
சில மாதங்களே நடித்த ஜோவிட்டா இந்த சீரியலில் இருந்து விலகுகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த தகவலையும் ஜோவிட்டா பூவே உனக்காக சீரியலின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் இடமும் தெரிவித்துவிட்டாராம். அதனால் அவரது கேரக்டருக்கு முடிவு கொண்டு வந்து கதையில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்த இருக்கிறார்களாம்.
ஜோவிட்டா விலகுவதற்கு காரணங்கள் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது .அதனால் விலகலாம் என்றும், அதே போல் பெரிய திரையில் வாய்ப்புகள் கிடைக்க உள்ளது அதனால் விலகுகிறார் என்றும், இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இதில் எது உண்மை என்று போகப்போகத்தான் தெரியவரும் என்கிறது வட்டாரம்.