பிரபல ஊடகமான இந்தியா டுடே வருடம் தோறும் ஒவ்வொரு மாநிலங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு அதன் அடிப்படையில் சிறந்து விளங்கும் மாநிலத்தை தேர்வு செய்து பரிசுகளை வழங்கி கௌரவம் செய்து வருகின்றது வேலை தொழில் வணிகம் மக்களுடைய வாழ்வின் தரம் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு ஆய்வு நடத்தி இவ்வாறு விருது வழங்கப் படுகின்றது அந்த வகையிலேயே 2020 ஆம் ஆண்டின் பெரிய மாநிலங்களுக்கான விருதை தமிழகம் வென்று இருக்கின்றது இந்த விருதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தொடர்ச்சியாக 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை மூன்றாவது முறையாக பெற்று ஹாட்ரிக் சாதனையை படைத்திருக்கிறது.
இந்த ஆய்வில் தமிழ்நாடு 1263.1 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் விஷன் தமிழ்நாடு 2023 என்ற தொலைநோக்கு திட்டத்தின் அடிப்படையிலேயே இன்றைய தமிழக அரசு செயல்பட்டு வருகின்றது அதிலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவார்ந்த விரைவான செயல் தமிழ்நாட்டிற்கு இந்த பெருமை கிடைத்ததற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. தொழில்துறை வளர்ச்சி முதலியவற்றில் தமிழக முதல்வர் காட்டிவரும் தனிப்பட்ட அக்கறை பல்லாயிரம் கோடிகணக்கிலான முதலீடுகளை தமிழகத்தின் பக்கம் ஈர்த்து இருக்கின்றது தொழில் செய்வதற்கு ஏற்ற சூழலை தமிழக அரசு ஏற்படுத்தி கொடுத்திருப்பதாக அந்த துறையினர் பாராட்டு தெரிவித்து இருக்கிறார்கள்.
நாடுடைய ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரிக்கும் மேலான பொருளாதார வளர்ச்சியை தக்க வைத்து சாதனை புரிந்திருக்கிறது தமிழக அரசு அதேபோல தனிநபர் வருமானத்தை ரூபாய் ஓரு லட்சத்து 53 ஆயிரத்து 853 ஆக உயர்த்தி இருப்பதன் மூலமாக கடந்த வருடம் 12-வது இடத்தில் இருந்த தமிழகம் இந்த ஆண்டு ஆறாவது இடத்திற்கு முன்னேறி இருக்கின்றது மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுடன் சமூகநீதியும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும் தமிழக அரசு குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு இருப்பதாக இந்தியா டுடே புகழாரம் சூட்டி இருக்கின்றது.
மனித மேம்பாடு குறியீட்டின் சிறந்த இடம் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவு ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் குறைவு என்று இந்தியாவின் மற்ற அனைத்து மாநிலங்களை விடவும் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கின்றது இந்த பின்னணியிலேயே தமிழகத்திற்கு 3வது முறையாக முதலிடம் கொடுத்து இருக்கின்றது இந்தியா டுடே.
இந்த மாபெரும் கௌரவத்தை தனக்கு கிடைத்த ஆபரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நினைக்கவில்லை அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரின் கடுமையான உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு போன்றவற்றால் தமிழக மக்களின் ஒத்துழைப்போடு தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த மாநிலம் தேர்வாகி இருக்கிறது இந்த விருதை அனைவருக்கும் அன்போடு சமர்ப்பிக்கின்றேன் தொடர்ச்சியாக தமிழக வளர்ச்சிக்கு ஒற்றுமையாக இருந்து உழைப்போம் என்று அவர் பரந்த மனதை காட்டியிருக்கின்றார்.