இந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை! இன்றைய ராசி பலன் 29-11-2020 Today Rasi Palan 29-11-2020

0
171

 

இன்றைய ராசி பலன்- 29-11-2020

நாள் : 29-11-2020

தமிழ் மாதம்: 

கார்த்திகை 14, ஞாயிற்றுக்கிழமை,

நல்ல நேரம்:

காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 3.15 மணி முதல் 4.15 மணி வரை.

இராகு காலம்: 

மாலை 4.30 முதல் 6.00 வரை

எம கண்டம்: 

மதியம் 12.00 முதல் 1.30 வரை

குளிகன்:

பிற்பகல் 3.00 முதல் 4.30 வரை

திதி:

வளர்பிறை சதுர்த்தசி திதி பகல் 12.48 வரை பின்பு பௌர்ணமி.

நட்சத்திரம்:

கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 06.03 வரை பின்பு ரோகிணி.

நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கிருத்திகை விரதம். கார்த்திகை தீபம். அண்ணாமலை தீபம், பௌணர்மி விரதம். தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு இருந்த பொருளாதார நெருக்கடிகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். பெரியோர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன் கிட்டும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடன் பிறப்புகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை அளிக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் காலதாமதமாகும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பெண்களுக்கு வேலைபளு கூடும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு பகல் 10.01 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. மதியத்திற்கு பிறகு மன அமைதி உண்டாகும். பணவரவில் இருந்த தடைகள் நீங்கி உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு பகல் 10.01 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் சம்பந்தமான சுபகாரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொன் பொருள் சேரும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். வராத கடன்கள் வசூலாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்று நீங்கள் எடுத்த காரியம் பாதியில் நிற்பதற்கான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அதிக லாபம் கிட்டும். புதிய பொருள் வீடு வந்து சேரும்.

Previous articleதிமுகவும் இல்லை! ரவுடிசமும் இல்லை!
Next articleவெறும் மஞ்சள் போதும்! உங்கள் மஞ்சள் பற்கள் கறையை நீக்கி விடலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here