இந்த ராசிக்கு இன்று புதிய நபரின் அறிமுகம் ஏற்படும்! இன்றைய ராசி பலன் 03-12-2020 Today Rasi Palan 03-12-2020

0
192

 

இன்றைய ராசி பலன்- 03-12-2020

நாள் : 03-12-2020

தமிழ் மாதம்:

கார்த்திகை 18, வியாழக்கிழமை,

நல்ல நேரம்:

காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்:

மதியம் 1.30 முதல் 3.00 வரை

எம கண்டம்:

காலை 6.00 முதல் 7.30 வரை

குளிகன்:

பகல் 9.00 முதல் 10.30 வரை

திதி:

திரிதியை திதி இரவு 07.27 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி.

 

நட்சத்திரம்:

திருவாதிரை நட்சத்திரம் பகல் 12.21 வரை பின்பு புனர்பூசம்.

 

மரணயோகம் பகல் 12.21 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

 

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே் இன்று கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும்.

 

ரிஷபம்

 

ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத சிக்கல்கள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பிரச்சினையை தவிர்க்கலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

 

மிதுனம்

 

மிதுன ராசிக்காரர்களே உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்களின் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும்.

 

கடகம்

 

கடக ராசிக்காரர்களே உங்களுக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் வீண் பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். நீண்ட நாள் எதிர்பார்த்த காரியம் இன்று நிறைவேறும்.

 

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் நிறைவேறும். உடல் உபாதைகள் குறைந்து ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

 

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களே குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும்.

 

துலாம்

 

துலா ராசிக்காரர்களே உங்களுக்கு நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் உண்டாகும்.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். எந்த ஒரு சுப காரியத்தையும், தொழில் சம்பந்தமாக எடுக்கப்படும் புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதியாக இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் நிதானம் தேவை.

 

தனுசு

 

தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நீங்கள் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணிபுரிபவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும்.

 

மகரம்

 

மகர ராசிக்காரர்களே இல்லத்தில் தாராள தன வரவு உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

 

கும்பம்

 

கும்ப ராசிக்காரர்களே உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற நல்ல பலன்களும் கிடைக்கும்.

 

மீனம்

 

மீனராசிக்காரர்களே இன்று உங்களுக்கு திடீர் செலவுகள் உண்டாகும். பிள்ளைகளுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினைகளை சமாளிக்க முடியும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.

Previous articleமாவட்ட செயலாளர்களுக்கு பறந்த உத்தரவு!
Next articleஒரே நாளில் உடம்பில் உள்ள ஒட்டுமொத்த சளியையும் கரைத்து வெளியேற்றிவிடும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here