அமைச்சர் அனில் விஜ் அவருக்கு பரிசோதனை காரணமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவரின் வயது 67 ஆகும். இவர் அரியானா மாநிலத்தின் உள்துறை அமைச்சர் ஆவார்.
இந்த தடுப்பூசி போடப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று பாதிப்பை அடுத்து, அம்பாலாவில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போட்ட பிறகும் இவருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டது ஏன்? என்பது குறித்து சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அதாவது இந்த கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை போட்ட பிறகே நோய் எதிர்ப்பு திறன் உடலில் உருவாகும். ஆனால் அமைச்சர் அனில் விஜுவிற்கு இந்த தடுப்பூசியின் முதல் டோஸ் மட்டுமே போடப்பட்டிருக்கிறது. கடந்த 20ஆம் தேதியன்று இவர் இந்த ஊசி போட்டுள்ளார். இவர் இரண்டாவது டோஸ் இது வரை போடாமல் இருந்ததால் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம்.