அமலாக்கத்துறை சிறப்பு இயக்குனர் சுசில் குமார் அவர்களுக்கு, அனைத்திந்திய வணிகர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அக்கடிதத்தில் அமேசான் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏனெனில் அமேசான் நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக முதலீடு செய்துள்ளது. அமேசான் நிறுவனம் 48 லட்சத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியதன் அடிப்படையில், அமேசான் நிறுவனத்திற்கு ஒரு லட்சத்து 45 கோடி ரூபாய் அபராதம் விதிக்க வலியுறுத்தி அனைத்திந்திய வணிகர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் அமலாக்கத்துறை சிறப்பு அதிகாரிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமேசான் நிறுவனத்தின் முதலீட்டால் சிறு குறு வணிகர்களின் வாழ்வாதாரம் எவ்விதத்திலும் பாதிக்காமல் இருப்பதற்கு நேரடி வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளின் அடிப்படையில் பாதுகாப்பு செய்து தருமாறும் அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.