பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றில் வணக்கம் என்று தமிழில் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி உரையை ஆரம்பித்தார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 138 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக வானவில் கலாச்சார மையம் சர்வதேச பாரதி விழா இன்று மாலை நான்கு முப்பது மணி அளவில் இணையம் வழியாக ஆரம்பித்து நடந்து வருகின்றது. இந்த விழாவில் சர்வதேச அளவிலும் நாடு முழுவதும் பல கவிஞர்களும், கலைஞர்களும், மற்றும் பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்று இருக்கிறார்கள்.
இந்த நிகழ்வில் காணொளி மூலமாக உரை நிகழ்த்திய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேசிய ஒருமைப்பாடு சமூக சீர்திருத்தம் மற்றும் பெண் விடுதலைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் பாரதியார், சுதந்திர கர்நாடக மாநில போக்குவரத்து வீரர்களுடைய பேரரசனாக திகழ்ந்தவர் பாரதியார் எனவும், அவருடைய கவிதைகள், கட்டுரைகள் மூலமாக சாதாரண மக்களுக்கும் விடுதலை தாகத்தை உண்டாக்கியவர் என்றும் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியபோது வணக்கம் என்று தமிழில் தெரிவித்து உரையாற்றத் தொடங்கினார் வாரணாசிக்கு பாரதிக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. அவர் துணிச்சலாக செயல்பட்டவர் பாரதியாருடைய எழுச்சியை இன்று இந்தியாவில் நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் அவர் வாழ்ந்த 39 வருடங்களில் பல சாதனைகளை படைத்தார் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.
தமிழும் தாய் நாடும் இரு கண்கள் என்று நினைத்திருந்தார் பாரதியார். பெண்கள் சமூகத்தின் வலிமையுடன் திகழவேண்டும் ஆண்களுக்கு நிகராக அவர்கள் உயர்ந்திட வேண்டும் என்று நினைத்தார்.. உலகத்தில் இருப்பவர்கள் அனைவரும் எதிர்த்த போதிலும் அச்சமில்லை என்று தெரிவித்தார் பாரதியார் உணவு மற்றும் புதுமையை ஒன்றிணைத்து இந்தியாவை உருவாக்க எண்ணினார் பாரதியார் என்று பிரதமர் மோடி பேசி வருகின்றார்.