காஞ்சிபுரம் அருகே இரவில் தூங்கிக்கொண்டிருந்த கணவர் திடீரென்று முழித்து பார்த்தபொழுது மனைவி சடலமாக இறந்து கிடப்பதை பார்த்து தானும் தூக்கு போட்டு இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் குப்பம்மாள் நகரில் வசித்து வருபவர் கதிர்வேல். இவரது மனைவி பெயர் மணிமேகலை. கதிர்வேல் டைல்ஸ் கடை வைத்துள்ளார். இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர்.முத்த மகள் பெயர் அக்ஷயா வயது 8.இரண்டாவது மகள் பெயர் நிவாஸினி வயது 4.
கதிர்வேல் மணிமேகலையின் மீது எப்பொழுதும் சந்தேகப்பட்டு அடிக்கடி தொந்தரவு செய்வார் என அக்கம்பக்கத்தினரால் சொல்லப்படுகிறது.
மணிமேகலையின் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி இருவருக்கும் சண்டை வந்துள்ளது. இதேபோல் சம்பவத்தன்று கதிர்வேல் சந்தேகப்பட்டு மனைவியை திட்டியுள்ளார்.
அனைவரும் தூங்க சென்று நிலையில் மணிமேகலை மட்டும் தூங்காமல் அழுது கொண்டு இருந்திருக்கிறார்.
உடனே துக்கம் தாளாமல் மனமுடைந்து மணிமேகலை தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். நடு இரவில் கதிர்வேல் தூக்கம் கலையவே திடீரென்று பார்த்தபொழுது மனைவி தூக்கு மாட்டி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மனைவி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து துக்கம் தாளாமல் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அடுத்த நாள் காலையில் இரண்டு மகள்களும் தூக்கத்திலிருந்து விழித்து இறந்து கிடந்த பெற்றோரை கண்டு கதறி அழுது இருக்கின்றனர். கதறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்திருக்கின்றனர். உடனே பாலுசெட்டி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து உள்ளனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சந்தேகத்தின் காரணமாக இரண்டு பெண் பிள்ளைகள் அனாதையாக நிற்கும் நிலையை கண்டு ஊர் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.