குமரி கடல் பகுதியில் வலி வந்து வாரத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருவதால், அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதோடு கடலோர மாவட்டங்களில் மிதமான மழை மழை மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று எச்சரிக்கை செய்திருக்கின்றது, சென்னை வானிலை ஆய்வு மையம்.
எதிர்வரும் 48 மணி நேரத்தில் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தெற்கு உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது. . இதனையடுத்து எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு, தென் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் மற்ற மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவிவரும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது, அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.
சென்ற 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புவனகிரி பகுதியில் 11 சென்டி மீட்டர் மழையும், பரமகுடி பரங்கிப்பேட்டை பகுதிகளில் தலா ஏழு செண்டி மீட்டர் மழையும், பெய்து இருக்கின்றது. இளையாங்குடி, குடவாசல் பகுதிகளில் தலா ஆறு சென்டி மீட்டர் மழையும், அய்யம்பேட்டை மயிலாடுதுறை பகுதிகளில் 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி இருக்கின்றது. தமிழகம் மற்றும் புதுவையை பொருத்தவரையில், வடகிழக்கு பருவமழை இன்றுவரை இயல்பை விட 50 சதவீதம் அதிகமாக இருக்கிறது, என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.