அரசு பள்ளிகளை நோக்கி படையெடுக்கும் மக்கள் கூட்டம்! காரணம் இதுதான்!

0
75

தரம் என்று சொன்னாலே அது தனியாரிடம் தான் இருக்கின்றது என்ற எண்ணம் மக்களிடையே மேலோங்கி இருக்கின்றது. அரசு நிறுவனங்கள் என சொன்னால் பலரும் முகம் சுழித்துக் கொள்கிறார்கள். என்ற நிலையில் தான் இதுவரையில் இருந்துவந்தது. ஆனாலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான ஆட்சியில் இந்த நிலை அப்படியே தலைகீழாக மாறி இருக்கின்றது என்றுதான் சொல்லவேண்டும். கடந்த இருபது வருடங்களில் இல்லாத அளவிற்கு, தமிழகத்தில் இருக்கின்ற அரசுப் பள்ளிகளில் 10 லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் சேர்ந்து இருக்கிறார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதிக கவனம் செலுத்திய துறைகளில் ஒன்று கல்வித்துறை, அதேபோல அந்த துறையின் அமைச்சர் செங்கோட்டையன் அவர்களும் பள்ளிக் கல்வித் துறையில் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றார். நிதி ஒதிக்கீடு செய்வதாக இருந்தாலும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்வதாக இருந்தாலும், எந்த குறையும் இல்லாத அளவிற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதோடு கணினி மூலமாக கல்வி கற்பது, ஸ்மார்ட் வகுப்பறைகள், என்று தமிழக அரசு பள்ளிகளில் இன்றைய நவீன முறைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இது மட்டும் இல்லாமல், முட்டையுடன் கூடிய சத்துணவு, இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள், காலணிகள், மடிக்கணினி ,மிதிவண்டி, என்று அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்திருக்கின்றது. எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அரசு இதன் காரணமாக, அரசுப் பள்ளிகள் மீது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவனம் திரும்பியிருக்கிறது.

அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்களின் நலனைக் காப்பதிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த கொரோனா நேரத்தில் மற்ற மாநிலங்களில் ஊதியத்தில் குறிப்பிட்ட சதவீதம் வரை குறைத்து கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் தமிழக அரசு ஆசிரியர்களுக்கு 10 மாதங்களாக முழு சம்பளமும் கொடுத்து வருகின்றது. இதற்கு நன்றிக்கடனாக எதிர்வரும் காலங்களில் எங்களுடைய பணியை முன்பை விட உற்சாகமாக செய்வோம், என்று தெரிவிக்கிறார்கள் ஆசிரியப் பெருமக்கள்.

இவை அனைத்தையும் விடவும், மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்ற தமிழக அரசின் சாதனை பின் அரசுப் பள்ளிகளை நோக்கி வரும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் வருகை அதிகரித்து இருக்கின்றது. எனவே எடப்பாடி ஆட்சி காலம் தமிழக பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலம் என்றால் அது மிகை ஆகாது என்று தெரிவிக்கிறார்கள்.