சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியிலிருந்து தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கின்றார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வரும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய சொந்த தொகுதியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கிறார். அதிமுக பிரச்சாரத்தை வெளியிடாமல் இருந்தாலும் முன்கூட்டியே சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து முதலமைச்சர் தன்னுடைய பிரச்சாரத்தை முன்னெடுத்து இருப்பது திட்டமிட்ட செயலாகவே பார்க்கப்படுகிறது.
தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக பெரிய சோரகை கிராம பெருமாள் கோவிலில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார் அங்கே அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்பு அங்கிருந்து தன்னுடைய ஆதரவாளர்கள், மற்றும் பாதுகாவலர்களுடன் முதல்வர் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட ஆரம்பித்தார். அதன் பின்னர் பெரிய சோரகை கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கையும் முதல்வர் திறந்து வைத்து இருக்கின்றார்.
எடப்பாடி சட்டசபை தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்றவர் எடப்பாடி பழனிசாமி. அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 99 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய தொகுதியில் பிரசாரம் செய்ய ஆரம்பிப்பது அனைவருக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.