ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர் ஓ. எஸ். ஜகன்மோகன் ரெட்டி இன்றைய தினம் தன்னுடைய 48வது பிறந்த நாளை கொண்டாடி கொண்டிருக்கின்றார். அவருடைய பிறந்தநாளை அடுத்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவருக்கு வாழ்த்துக் கடிதம் எழுதி இருக்கின்றார்.
அந்த கடிதத்தில், பிறந்தநாளில் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். தங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். என்று தெரிவித்து இருப்பவர், அனைத்து விதமான நலன்களையும் பெற வேண்டும் என்று, இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன். ஆந்திர மக்களுக்கு வேகத்துடனும் விவேகத்துடனும் இன்னும் பற்பல சேவைகளை செய்வதற்கு நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.