இன்று முதல் இரவுநேர முழு ஊரடங்கு:! அரசின் புதிய உத்தரவு!!
இந்தியாவில் மகாராஷ்டிரா, கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக கருதப்படுகின்றது.
இதுமட்டுமின்றி
அம்மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரையில் சுமார் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகளும் 49 ஆயிரம் இறப்புகளும் பதிவாகியுள்ளது.
இதுமட்டுமின்றி கொரோனாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நகரங்களில் மும்பை முதலிடத்தை பெற்றிருந்தது.இருப்பினும் கடுமையான ஊரடங்கு காரணமாக தொற்றுகளின் வீரியம் கணிசமாக குறைந்தது.மேலும் தோற்று பரவுதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதற்கிடையே தற்போது பிரிட்டனில்,புதிதாக உருவெடுத்துள்ள கொரோனவைரஸின் அச்சத்தால் இந்தியா உட்பட பல நாடுகள் பிரிட்டனுக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் மகாராஷ்டிரா அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் விதமாக ஐரோப்பாவிலிருந்து தரையிறங்கும் விமானிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதாக,
உத்தரவிட்டுள்ளது.
மேலும் கொரோனா பரவுதலின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக இன்று முதல் ஜனவரி 5ஆம் தேதி வரை மகாராஷ்டிராவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.