திமுகவின் ஊழல் புகாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மதில் தெரிவித்திருக்கின்றார். சென்னை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆளுங்கட்சிக்கு எதிரான தொண்ணுற்று ஏழு பக்கங்கள் உடைய ஒரு ஊழல் புகாரை கொடுத்து இருக்கின்றார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கு உள்பட எட்டு அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் பட்டியலை தமிழக ஆளுநர் இடம் கொடுத்துவிட்டு 2018 ஆம் வருடம் ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்து மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கின்றார். இந்தநிலையிலே தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதில் தெரிவித்திருக்கின்றார்.
கொரோனா மற்றும் டெல்டா போன்ற பகுதிகளில் சமீபத்தில் உருவான புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பொதுமக்கள் மிக கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக தைப்பொங்கலை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு .2500 உள்ளடக்கிய பொங்கல் பரிசு வழங்கி இருக்கின்றது. இது பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனை பொறுத்துக்கொள்ள இயலாத ஸ்டாலின் அரசின் மீதும் அமைச்சர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை ஆளுநரிடம் கொடுத்திருக்கின்றார்.
உங்களுடைய உறவினர்களுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டதாகவும், புகார் வந்திருக்கிறது என்ற கேள்விக்கு திமுக ஆட்சியில் தென்றல் ஒப்பந்தம் எடுத்தவர்கள் தான் இப்போது எடுத்து வருகிறார்கள். திமுக ஆட்சியில் வேண்டும் என்றால் தவறு நடந்திருக்கலாம் ஆனால் அதிமுக ஆட்சியில் அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பே கிடையாது என்று தெரிவித்தார்.
நான் முதலமைச்சர் ஆனது முதல் ஸ்டாலின் என் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றார். துரைமுருகன், ஐ. பெரியசாமி கே. என். நேரு, சுரேஷ்ராஜன், பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன், எம். ஆர். கே. பன்னீர்செல்வம், தமிழரசி, ராமச்சந்திரன், போன்ற அமைச்சர்கள் மீது சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது என்று முதல்வர் தெரிவித்தார்.
தங்கள் மீதான தவறுகளை மறைப்பதற்காக, அதிமுக அமைச்சர்கள் மீது பொய்யான அறிக்கையை தயாரித்து கொடுத்திருக்கிறார் திமுகவுடைய ஊழல் பட்டியல் தயாராக இருக்கின்றது. சந்தர்ப்பம் வரும்போது அதனை வெளியிடுவோம் என்று தெரிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.