பொங்கல் பரிசு பெறுவது எப்படி! விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

0
114

ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கும் நிலையில், அதை பெறுவதற்கான வழிமுறைகள் என்னென்ன என்று தமிழக அரசு தெரிவித்திருக்கின்றது. பொங்கல் பரிசு வாங்குவதற்காக எதிர்வரும் 26ஆம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் டோக்கன்கள் வழங்கப்படும் 26 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரைடோக்கன்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதனை அடுத்து ஜனவரி மாதம் நான்காம் தேதி முதல் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

நியாயவிலை கடைகளில் கூட்டம் கூட கூடாது என்ற காரணத்திற்காக, காலையில் 100 நபர்களுக்கும், பின்பு மதியம் நூறு நபர்களுக்கும், பரிசுத்தொகை வினியோகிக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றது .குறிப்பிட்ட நாளில் பரிசுத் தொகையை பெற்று கொள்ளாதவர்களுக்கு ஜனவரிமாதம் 13 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

கொரோனாவை மனதில் வைத்து கூட்டம் சேராமல், ஒரு ரேஷன் கார்டுக்கு ஒருவர் மட்டுமே ரேஷன் கடைக்கு வர வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டிருக்கின்றது. அதோடு பொங்கல் பரிசு மற்றும் தொகையும் ஒரே நேரத்தில் வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கின்றது.

Previous articleரஜினியின் அரசியல் பிரவேசம்! கதறும் திமுக கூட்டணி!
Next articleதிமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு! ஷாக்கான உதயநிதி!