உதயநிதியின் சட்டையை பிடித்து அடிக்க சென்ற இளைஞர்கள்! தொடர்ந்து அவமதிக்கப்படும் திமுக
தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற உதயநிதி ஸ்டாலினின் சட்டையை பிடித்து இளைஞர்கள் அடிக்க சென்ற சம்பவம் அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரும் நிலையில் அதில் திமுக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது .ஏன் என்றால் ஏற்கனவே 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இல்லாததால் இந்த முறை வெற்றி பெற்றால் தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்பதால்.அதற்காக தான் 350 கோடி கொடுத்து அரசியல் ஆலோசகர் ஆக பிராந் கிஷோர்யை நியமித்ததாக கூறப்படுகிறது.
பிராந் கிஷோர் என்னதான் விதவிதமாக நல்ல நல்ல பிளான் போட்டு கொடுத்தாலும் அது திமுகவுக்கு தோல்வியாகவே முடிகிறது.அதற்க்கு காரணம் ஆட்சியில் இருந்த போது திமுக செய்த மக்களுக்கு எதிரான திட்டங்களும் மற்றும் எப்போதும் மேடையில் உலறி கொட்டும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் பேச்சும், உடன் பிறப்புகளின் சில்மிஷம் களும் தான் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.இந்நிலையில் ஸ்டாலின் அவர்கள் வரும் தேர்தலில் 200 தொகுதியை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியை பெற்றே ஆக வேண்டும் என்றும் சமிபத்தில் பேசியிருந்தார்.
ஆனால் திமுகவுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் எதிர்ப்பே அதிகமாக உள்ளது.சில நாட்களுக்கு முன்பு தான் தருமபுரியில் செந்தில் எம்.பியை பிரச்சாரம் செல்லவிடாமல் மக்கள் தடுத்தனர் நேற்று சேலத்தில் தயாநிதி மாறன் எம்.பியை பிராச்சாரத்துக்கு செல்லவிடாமல் கார்களின் கண்ணாடியை உடைத்தார்கள்.இன்று திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதியை பிராச்சாரத்திற்க்கு போகும் வழியில் அவர் செல்லும் வாகனத்தை மடக்கி அவர் சட்டையை பிடித்து, உதயநிதிக்கு எதிராக கருப்பு கொடி காட்டியுள்ளார்கள்.இப்படியே போனால் 200 தொகுதி அல்ல 20 தொகுதி தான் திமுக வெற்றி பெற முடியும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவருகிறார்கள்.
உதயநிதியை அரியலூர் மாவட்டத்தில் தடுக்க காரணம் என்ன என்று மக்களிடையே கேட்டபோது,அரியலூர் மாவட்டம் திருமானூர் கிராமத்தில் மக்கள் தலைவர் G.K மூப்பனார் அவர்களின் பாராளுமன்ற நிதியில் ஒரு அரங்கமேடை அமைக்கப்பட்டிருந்தது.அந்த மேடைக்கு இன்று பிரச்சாரத்தில் பேச உதயநிதி வருவதால் திமுக தொண்டர்கள்,ஐயா G.K மூப்பனார் அரங்கம் என்ற பெயரை அவசர அவசரமாக அழித்துள்ளார்கள்.
இதனால் கோபம் அடைந்த அந்த பகுதி தமிழ்நாடு மக்கள் கட்சியினர் மற்றும் மக்கள் உதயநிதியை எச்சரித்து கருப்பு கொடி காட்டியுள்ளார்கள்.மேலும் திமுகவின் அராஜக போக்கை எதிர்த்து கோஷம் போட்டுள்ளார்கள்.அதில் ஒருவர் பிரச்சார வாகனத்தில் சென்ற உதயநிதியின் சட்டையை பிடித்து தனது எதிர்ப்பை காட்டியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது..
திமுகவை அழிக்க வெளியே இருந்து யாரும் வர தேவையில்லை திமுகவின் உ.பிகளே போதும் என்று நெட்டிசன்கள் கிண்டலாக பதிவிட்டு வருகிறார்கள்.