அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் ஏன் இத்தனை குழப்பம்? காரணம் என்னவென்று தெரியுமா!

0
141

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணி தொடர்பான இறுதி கட்ட முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலுக்கு அரசியல் கட்சிகள் தள்ளப்பட்டு இருக்கின்றன திமுக கூட்டணியில், காங்கிரஸ் விசிக மற்றும் இடதுசாரிகள் மதிமுக, போன்ற கட்சிகள் வலுவாக இருந்து வருகின்றன. இவற்றுள் சிக்கல் வருவதாக இருந்தால் அது தொகுதி பங்கீட்டின் போது தான் ஏற்படும் .அதன் காரணமாக இப்போதைக்கு எந்த ஒரு சலசலப்பு கிடையாது.

ஆனாலும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் தொடர்ச்சியான சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த கூட்டணியில் பாஜக மட்டுமே இதுவரையில் உறுதியாகி இருக்கின்றது. அதை பாஜகவின் மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்தபோது இருதரப்பும் அறிவித்துவிட்டது. மற்ற கட்சிகளான திமுக ,மற்றும் பாமக, போன்ற கட்சிகள் இன்னும் இழுபறியில்தான் இருந்து வருகின்றன.

இந்த கூட்டணியில், இப்போதைக்கு உறுதியாகி இருக்கும் பாஜகவும், அதிமுகவுக்கு தொடர்ச்சியான தொந்தரவுகளை கொடுத்துக் கொண்டே இருக்கின்றது. இப்போதைய பிரச்சனை என்பது முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தான். பாஜகவின் தலைவர் முருகன், துணை தலைவர் அண்ணாமலை துரைசாமி போன்ற தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் தான். கூட்டணியின் முதல் அமைச்சர் வேட்பாளரை விரைவாக அறிவிப்போம் என்று தெரிவிக்கிறார்கள்.

பாஜகவின் தேசிய தலைவர்கள் தமிழகம் வந்து செல்லும் பொழுதும் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவி விடுகிறார்கள் . அதன் காரணமாக இந்த விஷயமானது மிகப்பெரிய பூதாகரமாக எழுந்து நிற்கின்றன. இந்த பிரச்சனையின் அடிப்படையிலே சிக்கல் என்பது ஒன்றுதான்.

பாஜக கட்டமைத்த தேசிய ஜனநாயக கூட்டணி என்பது உடைய அடிப்படையாக ஒரு சில காரணிகளை இந்தியா முழுவதும் பின் தொடர்ந்து வருகிறார்கள். மாநில தேர்தல் என்றாலும் அந்த மாநிலத்தில் செல்வாக்கு இருக்கின்ற கட்சியை அங்கே கூட்டணிக்கு தலைமை ஏற்கின்றது. ஆனாலும் முதலமைச்சர் வேட்பாளர் போன்ற முடிவுகளை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேசிய தலைமை தான் அழிக்க வேண்டும் என்று நினைக்கின்றது. இது தான் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது.

பீகார் மாநிலத்தில் பாஜக விட பலம் வாய்ந்த கட்சி நிதிஷ்குமார் கட்சி. ஆனாலும் நிதீஷ் குமாரை முதல்-அமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்தது பாஜக. அதேபோல் தமிழ்நாட்டிலும் அதிமுக பெரிய கட்சி ஆனாலும் கூட அவர்களே தான் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று பாஜகவின் தேசியத் தலைமை விரும்புகின்றது.

இந்தியாவின் மற்ற மாநிலங்களை விடவும் வேறுபட்டது தமிழகம் என்பதை அந்த கட்சியினர் அடிக்கடி மறந்து விடுகிறார்கள். அதை நினைவூட்டும் வகையில் தான் அதிமுகவின் தலைவர்கள், இது பெரியார் மண் என்பதையும் திராவிட ஆட்சி காலத்தை தேசிய கட்சிகள் அவப்பெயரை ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அடிக்கடி தெரிவித்து வருகின்றது. இந்த பிரச்சனைகள் இப்போதைக்கு தீரும் என்று சொல்வதற்கு இல்லை இன்னும் பல விஷயங்களை அது நடந்தே தீரும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Previous articleநாடகமாடும் ரஜினிகாந்த்? கமல்ஹாசன் அளித்த ருசிகர பதில்!
Next articleபொங்கல் பரிசு தொகை வழங்குவதை உடனடியாக நிறுத்தாவிட்டால் அவ்வளவுதான் ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!