பொங்கல் பரிசு தொகை வழங்குவதை உடனடியாக நிறுத்தாவிட்டால் அவ்வளவுதான் ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

0
59

அதிமுகவின் நிர்வாகிகளை வைத்து பொங்கல் பரிசு டோக்கன் கொடுப்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், எல்லா ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் அளிக்கும் பணி, மற்றும் 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கும் பணி போன்றவை எந்தவிதமான முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக மட்டுமே நடந்திட வேண்டும். என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கின்றார். இதுதொடர்பாக அவர் தெரிவித்த போது,

பொங்கல் திருநாளை முன்னிட்டு எல்லா ரேஷன் கார்டுதாரர்களுக்கும்.2500ரூ அளிக்கப்படும் என்று 19 -12- 2020 அன்றைய தினம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். அவர் வெளியிட்ட அரசாணையில், ஜனவரி மாதம் 4ஆம் தேதியில் இருந்து இந்த திட்டமானது அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. முதல்வரின் பேச்சு செய்திக்குறிப்பு அரசாணையில் வெளியிடப்பட்டு இந்த செய்தியை அறிவிக்கப்பட்டாலும் கூட இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் குழப்பங்களை ஏற்படுத்தி தேர்தலை மனதில் வைத்து இந்த திட்டமானது, அதிமுகவின் நிதியிலிருந்து கொடுக்கப்படும் பொங்கல் பரிசு போல காட்டிக் கொள்வதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முயற்சி செய்து வருகின்றார். என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக இருக்கின்றது.

தொற்றினால் பாதிக்கப்பட்டு மருந்து உணவு போன்ற அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் இருந்த நேரத்தில், குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாய் அதிகபட்சமாக 7 ஆயிரத்து 500 ரூபாய் என வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பிறகு உருவான நிவர் புயல் காரணமாக, ஏற்பட்ட சேதத்திற்கு போதுமான உதவிகளை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்பொழுதெல்லாம் ஏதும் பேசாமல் இருந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

ஆனால் தற்சமயம் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து இந்த பொங்கல் பரிசுத் திட்டத்தை அறிவித்து இருக்கின்றார். அது என்னவோ அதிமுகவின் சொந்த நிதியிலிருந்து வழங்கப்படும் பரிசை போல ஒரு தோற்றத்தை உருவாக்க திட்டமிட்டிருக்கிறார்கள் ஆளும் தரப்பினர். இது வன்மையான கண்டனத்திற்கு உரியது.

அது மக்களுடைய பணம் அது மக்களுக்கு திரும்பி செல்வதை திமுக மனதார வரவேற்கின்றது. அதேநேரத்தில் தேர்தலுக்காக பொங்கல் பரிசை அதிமுகவினரை வைத்து எவ்வாறு கொடுக்க வைத்தார் முதலமைச்சர். அரசு கஜானாவில் இருந்து போகும் பரிசு திட்ட நிதியை அதிமுகவினர் எதற்காக கையாளவேண்டும். எல்லாமே தவறுக்கு மேல் தவறு இருக்கின்றது. அனைத்து கார்டுதாரர்களுக்கும் இந்த பரிசு திட்டமானது மக்களை சென்று சேர்வதில் குளறுபடிகளை ஏற்படுத்தும் விதத்தில் அதிமுகவினர் சிலர் தில்லாலங்கடி வேலைகளை திட்டமிட்டு செய்கிறார்கள். இது எதற்காக அதிமுகவினரும் பொறுப்புகளில் விடப்பட்டிருக்கிறது. என்பது தொடர்பாக முதலமைச்சர் பொது மக்களுக்கு விளக்கம் கூற வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.