கடந்த 2000 -ம் ஆண்டு இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இதில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, அஜித், அப்பாஸ், தபு, ஐஸ்வர்யாராய் போன்ற முன்னனி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின.
இத்திரைப்படத்தில் அஜித் வாய்ப்பு தேடும் இயக்குநராக நடித்திருந்தார். அவர் நடிப்பும் அந்த கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அந்த கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தவர் பிரசாந்த் தானாம். ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்கமுடியாமல் போக அஜித் நடித்து அந்த படமும் சூப்பர் ஹிட்டும் ஆனது.