புத்தாண்டு அன்று இதை வாங்கினால் வருடம் முழுவதும் பணமழை பொழியும்!

0
133

வெள்ளிக்கிழமையான இன்று 1.1.2021 இன்று ஆங்கில புத்தாண்டு. புத்தாண்டு அன்று இந்த பொருட்களை வாங்கினால் பணமழை கொட்டும் என்கிறது சாஸ்திரம்.
என்னென்ன பொருட்கள் வாங்கலாம் என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு பார்க்கப் போகின்றோம்.

அதுவும் இந்தப் புத்தாண்டு வெள்ளிக்கிழமை அன்று பிறப்பது மிகவும் சிறந்தது. வெள்ளிக்கிழமை என்பது பூஜை செய்யக் கூடிய நாள் விரதம் இருக்கக் கூடிய நாள் சிறப்பான நாள். இந்தப் புத்தாண்டு வெள்ளிக்கிழமை இருப்பதால் வருடம் முழுவதும் சுபிட்சமாக இருக்கும்.
ஒரு சில பொருட்களை புத்தாண்டில் வாங்கினால் வீடு சுபிட்சமாக இருக்கும்.
சகல ஐஸ்வர்யங்களும் பணமழை கொட்டும் என்பது சொல்லப்படுகிறது.

புத்தாண்டு அன்று காலையில் எழுந்து தலைக்கு குளித்து விட்டு பெண்கள் ஒரு சில பொருட்களை வாங்க வேண்டும். வெள்ளிக்கிழமை என்று உப்பு வாங்குவது வழக்கம். அதேபோல் புத்தாண்டு அன்று சுக்கிர ஹோரைகள் அல்லது நல்ல நேரம் பார்த்து கல்லுப்பு வாங்கி பூஜை அறையில் வைத்து பூஜை செய்துவிட்டு பின் உப்பு ஜாடியில் போட்டு வைத்து விடவேண்டும்.
இப்படி வெள்ளிக்கிழமை அன்று உப்பு வாங்குவது சகல ஐஸ்வர்யம் தரும் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் வெள்ளிக்கிழமை அன்று உப்பு வாங்குவது சிறந்தது என்று சொல்வார்கள் அதுவும் இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை புத்தாண்டு என்பதால் கல் உப்பு வாங்குவது இந்த வருடம் முழுவதும் சகல ஐஸ்வர்யங்கள் பெருகிக் கொண்டே இருக்கும்.

சுபகாரியங்களை தரக்கூடிய மஞ்சள் குங்குமம் ஆகியவற்றை அனைத்து நல்ல நாட்களிலும், அனைத்து பண்டிகைகளில் நல்ல நேரங்களிலும் வாங்கினால் சகலமும் வீடு வந்து சேரும் என்பார்கள்.
இரண்டாவது நாம் வாங்குவது மஞ்சள் பொடி.மூன்றாவதாக வாங்கக் கூடிய பொருள் பால்.

லட்சுமி வாசம் செய்யும் பொருட்களான அனைத்து பொருட்களையும் இந்த புத்தாண்டில் வாங்கினால் சகல ஐஸ்வர்யம் லட்சுமி தேவி அள்ளி தருவாள்.

கல் உப்பு மஞ்சள் பொடி பால் ஆகியவை உட்பட மேலும் வீட்டில் உள்ள பெண்கள் ஒருசில பொருட்களை வாங்கலாம். பச்சரிசி, வெல்லம், சர்க்கரை, நாட்டு சர்க்கரை போன்றவற்றை வாங்கலாம்.
தானியம் வாங்கலாம். மல்லிகைப்பூ வாங்கலாம். தங்க ஆபரணத்தை வாங்கலாம். புத்தாடை வாங்கலாம்.

இதை இந்த நாளில் செய்கிறோமோ அது பெருகிக்கொண்டே இருக்கும். நீங்கள் தங்கம் வாங்கினால் தங்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். அதேபோல் இந்த புத்தாண்டில் சமையலறையில் உள்ள தானியங்கள் அனைத்தும் நிறைந்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். எதையும் காலியாக வைத்திருக்க வேண்டாம்.

எனவே வீட்டில் உள்ள பெண்கள் இந்த பொருட்களை வாங்கி வீட்டில் உள்ள ஐஸ்வர்யத்தை பெருக்கி கொள்ளுங்கள். அனைவரும் சந்தோஷமாக வருடத்தின் முதல் நாளை கொண்டாடுங்கள். இந்த வருடம் கண்டிப்பாக அனைவருக்கும் நல்ல வருடமாக அமைய வாழ்த்துக்கள். மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Previous articleதென் கொரியாவின் “செயற்கை சூரியன்” 20 வினாடிகளுக்கு 100 மில்லியன் டிகிரியை அடைந்து உலக சாதனை!
Next articleஇந்த ராசிக்கு இன்று எதிலும் நிதானமாக இருப்பது நல்லது! இன்றைய ராசி பலன் 01-1-202 Today Rasi Palan 01-01-2021