முதல்வருடன் போட்டி போட்ட வாகனங்கள்! ஏற்பட்ட விபரீத முடிவு!

0
149

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது, அவர் வாகனத்திற்குப் பின்னால் அவருடன் போட்டி போட்டுக்கொண்டு அணிவகுத்து வந்த வாகனங்கள், அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரில் முன்னாள் சபாநாயகர் பி ஹச் பாண்டியன் மணிமண்டபம் கட்டப்பட்டு இருக்கிறது. அதை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ,மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் போன்றோர் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 2 .15 மணி அளவில் வந்து சேர்ந்தார்கள்.

அங்கிருந்து முதல்வரும், துணை முதல்வரும், கார்களில் வல்லநாடு வழியாக சேரன் மாதேவிக்கு சென்றுகொண்டிருந்தார்கள். வல்லநாடு பேருந்து நிலையம் அருகே சுமார் 3 10 மணி அளவில் முதலமைச்சர் காருக்கு பின்னால் வந்த கார்கள் போட்டி போட்டுக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு கார் திடீரென்று சாலையை கடந்து கொண்டிருந்த கன்றுகுட்டி மீது மோதி தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியன் மீது மோதி நின்றது.

இதனால் பின்னால் வந்த இரு கார்கள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக விபத்தில் சிக்கிய காரின் மேல் மோதி நின்றது. இதில் மூன்று கார்களும் பலத்த சேதமடைந்தன .கார்களில் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி பிரபாகரன் மதுரையை சேர்ந்த ராஜ்மோகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்பட, 10 பேர் காயமின்றி உயிர் தப்பினார்கள். இதனை தொடர்ந்து பின்னால் வந்த மற்ற அதிமுக நிர்வாகிகள் கார்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஏறிச்சென்றார் இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

Previous articleபிறந்த நாளன்று இந்திய அளவில் கனிமொழிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம்!
Next articleமலர் தூவினால் மயிர்கொட்டி விடுமா தளபதி? திமுக எம்எல்ஏ செய்த காரியத்தால் ஸ்டாலினை கலாய்த்த நெட்டிசன்கள்!