கருணாநிதியின் வலதுகரமாக இருந்து அனைத்து சூழ்நிலைகளிலும், கருணாநிதியை புகழ்ந்து பேசி வந்த துரைமுருகன் இப்பொழுது பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வருகின்றார். தான் ஒரு சீனியர் என்பதையும் கடந்து ஸ்டாலினை புகழ்ந்து பேச வேண்டிய கட்டாயத்திலும் அவர் இருந்து வருகின்றார். இந்த நிலையிலே, திமுகவிற்கு துரைமுருகன் ஒரு புது வழியை காட்டி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது நம்மை மதிக்காத எந்த கட்சியுடனும் கூட்டணி தேவையில்லை. தனித்து நிற்கலாம் என்று துரைமுருகன் ஸ்டாலினுக்கு ஆலோசனை தெரிவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணியில் இருக்கின்ற காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், ஐஜேகே, முஸ்லீம் லீக் ,மற்றும் மமக போன்ற கட்சிகள் அதிக இடங்களை கேட்டு தொந்தரவு செய்து வருகின்றன. ஒரு குறிப்பிட்ட தொகுதி தான் வேண்டும் என்று கூட்டணி கட்சியின் தலைவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதால், திமுக நிர்வாகிகள் எரிச்சலடைந்து இருக்கிறார்கள்.
சமீபத்தில் அறிவாலயத்தில் நடந்த ஆலோசனையின் பொழுது துரைமுருகன் மிகவும் கோபப்பட்டு இருக்கின்றார். தனித்து போட்டியிட்டால் டெபாசிட் கூட வழியில்லாத கட்சி எல்லாம் நம்மை மிரட்டி பார்க்கிறார்கள். இதனை அனுமதிக்கவே கூடாது நம் வழி தனி வழி என்று போய்க்கொண்டே இருக்கவேண்டும் என கொந்தளித்து இருக்கிறார் துரைமுருகன் இவ்வாறு பேசுவதற்கு காரணம் இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள் .பாமகவை எப்படியும் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறாராம் துரைமுருகன்.
அதன் காரணமாக, இப்பொழுது கூட்டணி இருக்கும் கட்சிகளை வெளியேற்றினால் மட்டுமே இது சாத்தியம் என்ற காரணத்தால், தனித்தே நிற்கலாம் என்று தெரிவித்து கூட்டணிகளை வெறுப்பேற்றி வருகின்றார் என்று சொல்கிறார்கள். துரைமுருகன் தெரிவிப்பதை கேட்டால் நிச்சயம் திமுகவிற்கு தோல்விதான் ஏற்படும் என்று தெரிவிக்கிறார்கள். ஆனால் ஸ்டாலின் யோசித்து வருவதுதான் திமுகவினரை அதிர வைத்திருக்கிறது. ஏனென்றால் எப்போதுமே கடைசி நேரம் பிரச்சனையை உருவாக்கி கொள்வது தான் திமுகவின் நிலைப்பாடு என்று சொல்கிறார்கள்.