நிக்கராகுவா மிருகக்காட்சிசாலையில்,ஒரு ஜோடி மஞ்சள் மற்றும் கருப்பு நிறப் புள்ளிகள் உள்ளன.இந்நிலையில் அந்த மிருகக்காட்சி சாலையில் வெள்ளைநிறப் புலிக்குட்டி ஒன்று பிறந்துள்ளது.
அதற்கு “நீவ்” என்ற பெயர் சூட்டிய “தி வைலட் கேட்” சரணாலயம் தன் நாட்டிலேயே பிறந்து முதல் வெள்ளைநிற புலிக்குட்டி “நீவ்” தான் என்று சமூக வலைத்தளங்களில் செய்தியைப் பரப்பி வருகிறது.இந்நிலையில் அந்த வெள்ளை நிற புலிக்குட்டியை அதன் தாய் தனது குட்டியாக ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதாம்.
நீவ் என்பதற்கு ஸ்பானிஷ் மொழியில் “பனி” என்பது பொருளாம். நீவ் பிறக்கும் பொழுது ஒரு கிலோ மட்டுமே எடை கொண்டதாக அந்த மிருகக்காட்சி சாலையில் இயக்குனரான எட்வர்டுடோ சகாசா கூறியுள்ளார்.
மேலும் தாயினால் நிராகரிக்கப்பட்ட இந்த வெள்ளைப்புலியினை மிருகக்காட்சி சாலையின் இயக்குனர் எட்வர்டோ சகாசாவின் மனைவி மெரினா ஆர்குவெல்லோவால் தத்தெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இம்மாதிரியான வெள்ளை புலிகள் காடுகளில் வளர்வதில்லை எனவும் சில பூங்காக்கள் அல்லது மிருகக்காட்சி சாலைகளில் இனப்பெருக்கம் செய்வதாகவும் கூறப்படுகிறது.
மேலும் வங்காளப் புலிகள் மற்றும் வெள்ளை புள்ளிகள் பரம்பரை பரம்பரையாகவே மந்தமான மரபணுவை பெற்றுள்ளவையாம்.ஆனால் இவை தனி இனங்கள் அல்ல.
வெள்ளைப் புலி ஈன்றெடுத்த மெரினா சுமார் 700 விலங்குகள் இருக்கும் மிருக காட்சி சாலை மற்றும் ஒரு மீட்பு மையத்தையும் நிர்வகிக்க உதவி வருகிறாராம். நீவ் பற்றி மெரினா கூறுகையில் பொதுவாக “இவள் பசியை பொறுப்பதில்லை.மேலும், மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு பாட்டில் அளவு பால் இவளுக்கு கொடுக்கப்படுகிறது.பால் மிகவும் வெதுவெதுப்பான நிலையில் இருந்தால் மட்டுமே அவள் குடிக்கிறாள்” வேடிக்கையாக கூறியுள்ளார்.