நாங்கள் எப்பொழுதும் அடிபணிய மாட்டோம்! மத்திய அரசுக்கு சவால் விட்ட விவசாய சங்கங்கள்!

Photo of author

By Sakthi

மத்திய அரசிற்கும் விவசாயிகளுக்கும் நடந்த எட்டாவது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இன்றைய தினம் விவசாயிகளுடைய போராட்டமானது சுமார் 45 தினங்களாக தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.

மத்திய அரசு கொண்டுவந்த வைக்கின்ற புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகள், மற்றும் மத்திய அரசு இடையில் எட்டாவது கட்ட பேச்சுவார்த்தை நேற்றைய தினம் சுமார் 2 மணி அளவில் ஆரம்பித்தது. அது மாலைவரை நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், அதே போன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், மற்றும் வர்த்தக தொழில் துறை இணை அமைச்சர் ஷாம் பிரகாஷ், போன்றோர் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்த தொடங்கினார்கள். சட்டங்கங்களில் ஏற்படுத்தக்கூடிய திருத்தங்கள் தொடர்பாக ஒன்றன்பின் ஒன்றாக பேசலாம் என்று விவசாய சங்கங்கள் இடம் மத்திய அரசு தரப்பில் மறுபடியும் ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

விவசாயிகளுடைய நல்வாழ்வை நினைத்துத்தான் இந்த வேளாண் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்திருக்கிறார் . வேளாண்மை சங்கங்கள் இந்த போராட்டத்தை மிக நேர்த்தியாக நடத்தி வருவது பாராட்டத்தக்கது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அந்த சமயத்தில், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் வேளாண்மை சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று உறுதிபட தெரிவித்து இருக்கிறார்கள். அதை விடுத்து திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்பது சாத்தியப்படாது என்று தெரிவித்த காரணத்தால், நெடுநேர ஆலோசனைக்கு பிறகு கூட இதில் யாதொரு முடிவும் எட்டப்படவில்லை. அதன் காரணமாக, அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை ஜனவரி மாதம் 15ஆம் தேதி நடத்துவதற்கு விவசாய சங்கங்களும், மத்திய அரசும் முடிவு செய்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாரதிய கிசான் யூனியன் செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகாய்த், மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற வேளாண்மை சட்டங்களுக்கு நாங்கள் எப்பொழுதும் பணிந்து விடமாட்டோம். மறுபடியும் 15ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு நிச்சயமாக வருவோம் ,வேறு எங்கும் போக மாட்டோம், இந்த சட்டம் தொடர்பாக விவாதம் செய்வதற்கு எங்களுக்கு விருப்பம் இல்லை. இந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்ததாவது, விவசாய சங்கங்களில் பல சங்கங்கள் அரசு கொண்டு வந்திருக்கின்ற இந்த சட்டங்களை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்து இருக்கிறார்கள். ஆகவே இந்த சட்டத்திற்கு எதிரான மனநிலையை வைத்திருக்கும் விவசாய சங்கங்களுடன் தொடர்ச்சியாக அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையே, ஹரியானா போன்ற மாநிலங்களிலிருந்து தலைநகர் டெல்லிக்கு டிராக்டர்களில் விவசாயிகள் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக இந்த விவசாயிகளுடைய போராட்டமானது இன்னும் வேகம் எடுக்க வாய்ப்பு இருக்கிறது.