இன்று கூடும் பொதுக்குழுவில் எடுக்கப்படும் முக்கிய முடிவு! அதிர்ச்சியில் பாஜக!

0
68

ஆளும் கட்சியான அதிமுகவின் பொதுக்குழு கூட்டமானது இன்றைய தினம் சென்னையிலே ஆரம்பிக்கப்படுகிறது .அனைத்து அரசியல் கட்சிகளும் வருடத்திற்கு ஒரு முறை பொது குழுவையும் இரண்டு முறை செயற்குழுவில் ஒன்று திரட்டும் என்று சொல்லப்படுகிறது. இந்த கூட்டத்திலே செய்யப்படும் முடிவுகளை தேர்தல் ஆணையத்திற்கு அந்த கட்சிகளின் சார்பாக அறிக்கையாக அளிக்க வேண்டும். ஆகவே ஆளும் கட்சியான அதிமுக உடைய பொதுக்குழு கூட்டமானது, அந்த கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் ,இன்றைய தினம் சென்னை வானகரத்தில் இருக்கின்ற ஸ்ரீ வாரு. மஹாலில் நடைபெற இருக்கிறது.

பொதுக்குழு நடைபெற இருப்பதை தொடர்ந்து, பொதுக்குழு உறுப்பினர்களும் சிறப்பு அழைப்பாளர்கள் கடிதம் மூலமாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். பொதுக்குழுவிலே தலைமை கழக நிர்வாகிகள் உட்பட மூவாயிரத்து ஐனூறு நபர்கள் வரை பங்கு பெறலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்த சமயத்தில், கூட்டணி குறித்தும் சட்டசபை தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் செய்யப்பட்டு அறிவிக்கப்பட இருக்கும் தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க படுவதற்கான அதிகாரமானது ஓ. பன்னீர்செல்வம், மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு வழங்கப்பட உள்ளது. முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும், வழிகாட்டு குழுவிற்கு ஒப்புதல் வழங்கும் தீர்மானம், போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன.

வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கிலே, சிறைக்கு சென்றிருக்கும் சசிகலா வெளியே வருவதற்கு இன்னமும் 19 தினங்களே இருக்கும் காரணத்தால், அவருடைய விடுதலைக்கு பின்னர் நடக்கப்போகும் அரசியல் மாற்றங்கள் தொடர்பாக, விவாதிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுக்கூட்டத்தை போன்று கே.பி. முனுசாமி போன்ற முக்கிய தலைவர்கள் பாஜகவை பற்றி அதிகமாக விவாதிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.