ஹிந்தி என்றாலே தமிழகத்தில் பிரச்சனையா? ஹிந்தி பேச்சு புரியாததால் கொலை? பதற்றத்தில் தமிழகம்?

0
152

வேலூரில் திருமணத்திற்காக வந்த இராணுவ வீரர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது கொலையா இல்லை தற்கொலையா என போலீசார் தரப்பில் விசாரணை நடந்து வருகிறது.

இராணுவ வீரர் மகேஷ் வேலூரில் கண்ணியம்பாடியை சேர்ந்தவர். இவர் தனது திருமணத்திற்காக ஒரு மாதம் விடுப்பு எடுத்து தனது சொந்த ஊரான கண்ணியம்பாடிக்கு வந்துள்ளார். புவனேஸ்வரி என்ற பெண்ணை கடந்த மாதம் 12 ஆம் நாள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. புவனேஸ்வரி வேலூர் தாலுக்கா அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

அந்த ஒரு மாத விடுப்பில் இருக்கும் போதே மகேஷின் தந்தை இறந்ததால் பெரிதும் மனமுடைந்து போனார். இதனால் தனது விடுப்பை அதிகரித்து கொண்டார். இப்படி இருக்கு சமயத்தில் மகேஷ் தனது வடமாநில நண்பர்களிடம் இந்தியில் பேசியுள்ளார். இதனை கண்ட புவனேஸ்வரி சந்தேக பட்டு வேறொரு பெண்களிடம் தான் பேசுகிறார் என்று எண்ணி, யாரிடம் பேசுகிறீர்கள் என்ன ஹிந்தியில் பேசினீர்கள் என்ற சந்தேக கோணத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதனால் பெரிதும் மனமுடைந்து போனார் மகேஷ். இப்படியே சிறிது நாள் பேச்சு வார்த்தை போய் கொண்டிருக்க ஒரு நாள் இருவரும் வெளியில் சென்று கொண்டிருந்தனர் வண்டியில். மீண்டும் அந்த விவகாரம் தொடர்பாக இருவரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மனமுடைந்து மகேஷ் வண்டியை மேம்பாலத்தின் மேல் நிறுத்திவிட்டு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு சமயம் இருவருக்கும் பேச்சு முற்றி போக புவனேஸ்வரி இருப்பதை விட சாவதே மேல் என கூறி மேம்பாலத்தில் இருந்து குதிக்க முயன்றிருக்கிறார். உடனே மகேஷ் நீ ஏன் சாகவேண்டும் நானே சாகுறேன் என்று கூறி மனைவியை தடுத்து விடும் மகேஷ் மேம்பாலத்தில் இருந்து குதித்து விட்டார்.

இதனால் படுகாயம் அடைந்த மகேஷ் அங்கேயே உயிர் விட்டார். இது தொடர்பாக காவல் துறையினர் விவரம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மகேஷ்யை அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டனர்.

இது தொடர்பாக காவல் துறையினர் மனைவி புவனேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர். புவனேஸ்வரி கூறியதாவது, தனது கணவர் ஹிந்தியில் நண்பரிடதில் பேசினார் நான் சந்தேகத்தில் வேறொரு பெண்களிடம் பேசுகிறார் என்று எண்ணி என்ன பேசுகிறீர்கள், யாரிடம் பேசினீர்கள் என்று கேட்டேன் இது வாக்குவாதத்தில் முடிந்ததால். தற்கொலை செய்து கொண்டார் என கூறியுள்ளார்.

மேலும் இது பற்றி காவல் துறையினர் இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Previous articleஓரிரவில் நிரம்பிய மேட்டூர் அணை !! நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!!!
Next articleஅமித்ஷாவை கண்டு எதிர்கட்சிகள் அஞ்சுகிரதா? “கோபேக்” என்ன ஆனது? பம்புகிறதா திமுக? காரணம் என்ன?