மாநில நிதி அமைச்சர்களுடன் இறுதிகட்ட ஆலோசனை நடத்தினார் மத்திய நிதியமைச்சர்!

0
145

வருகின்ற பிப்ரவரி மாதம் 1ஆம் தேதியன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஏற்கனவே அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தற்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான இறுதி கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்கான பட்ஜெட் குழு அதி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

மேலும் இந்த பட்ஜெட் தாக்குதலுக்கான இறுதி கட்ட ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதாவது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் இறுதிக்கட்ட ஆலோசனையை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் தமிழக நிதி அமைச்சரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலமாக பங்கேற்றனர். அப்போது பேசிய அவர்கள் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

அது என்னவென்றால் காவிரி – குண்டாறு திட்டங்களுக்கும், மேலும் இதுபோன்ற நீராதாரம் சார்ந்த அனைத்து திட்டங்களுக்கும் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அத்துடன் மத்திய அரசு ஏற்கனவே தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிலுவையில் இருக்கும் தொகையை விரைவில் வழங்கும் படியும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Previous articleசசிகலாவின் கருணையால் முதல்வரான எடப்பாடி! ஸ்டாலின் விளாசல்!
Next articleஸ்டாலினும் ரஜினியும் ரகசியக் கூட்டா? அம்பலமானது ரகசியம்!