தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம், பாண்டிச்சேரி, போன்ற மாநிலங்களில் எதிர்வரும் மே ,அல்லது ஏப்ரல் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இதனைத் தொடர்ந்து ஏ பி பி ,சிவோட்டர் ஆகியவை ஒன்றிணைந்து தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் கருத்துக்கணிப்புகளை நடத்தியிருக்கின்றன. அந்த கருத்துக் கணிப்புகளின் முடிவுகளும் வெளியாகி இருக்கின்றன. அந்த கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் படி மேற்கு வங்காளத்தில் இப்போது இருக்கும் ஆட்சியே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநிலத்தில் இருக்கும் 294 சட்டசபைத் தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 154 முதல் 162 இடங்கள் வரை வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாநிலத்தில் எப்பாடுபட்டாவது ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற ஒரு முனைப்பில் செயல்பட்டு வருகின்றது பாஜக. ஆனாலும் இந்த கட்சி 98 முதல் 106 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கூட்டணியானது 26 முதல் 34 இடங்கள் வரை மட்டுமே பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கருத்துக் கணிப்பில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 234 தொகுதிகளில் இருக்கின்ற தமிழ்நாட்டிலேய திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் 158 முதல் 165 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆளும் கட்சியான அதிமுகவின் கூட்டணி 60 முதல் 68 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 2 முதல் 6 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது .கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் இரண்டு முதல் நான்கு தொகுதிகளில் வெற்றி அடையும் எனவும் இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது . தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவிக்கு ஸ்டாலின் 36.4 சதவீதத்துடன் 1 இடத்தில் இருக்கிறார் ,இப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 25.5 சதவீதத்துடன் 2,ம் இடத்தில் இருக்கிறார், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் 10.9 சதவீதம் பெற்றிருக்கிறார். சசிகலாவிற்கு 10.6 சதவீத ஆதரவு கிடைத்திருக்கிறது கட்சியே ஆரம்பிக்காத ரஜினிக்கு 4.3 சதவீத ஆதரவு கிடைத்திருக்கிறது கமலஹாசன் அவர்களுக்கு 3.6% வரை ஆதரவு கிடைத்திருக்கிறது.
140 தொகுதிகளில் உடைய கேரள மாநிலத்தில் இடதுசாரிகள் மறுபடியும் ஆட்சியை பிடிக்கும் என்று இந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இடது ஜனநாயக முன்னணி 80 முதல் 89 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி தலைமை ஏற்றிருக்கும் ஐக்கிய ஜனநாயக முன்னணி 49 முதல் 57 இடங்களில் வெற்றிபெறும் எனவும், பாஜக இரண்டு இடங்களில் வெற்றி பெறும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. அசாம் மாநிலத்தில் இப்போது ஆட்சியில் இருக்கும் பாஜக அங்கே தன்னுடைய ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணிக்கும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கடுமையான போட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.