திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! காங்கிரஸ் கட்சியை கழட்டிவிட திட்டமிடுகிறதா திமுக?

0
134

திமுக தன்னுடைய மாவட்டச் செயலாளர்கள் உடன் ஆலோசனை செய்வதற்காக நாளைய தினம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் ஸ்டாலின் தேனி மாவட்டத்திற்கு சென்று இரவில் அங்கேயே தங்கி நேற்றைய தினம் அவருடைய கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டு இருந்தார். ஆனாலும் தேனி மாவட்ட பயணத்தை அவர் திடீரென்று ரத்து செய்திருக்கிறார். ஆகவே இன்றைய தினம் சென்னையில் நடக்கும் திமுகவின் நிகழ்வுகளில் பங்கேற்று முடித்துவிட்டு நாளைய தினம் அந்த கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின் பொழுது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடர்பாக உரையாற்ற இருப்பதாகவும், அந்த உரையாடலில் சில முக்கியமான முடிவுகள் எடுத்து அறிவிக்கப் போவதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

சமீபத்தில் பாண்டிச்சேரியில் நடந்த திமுக மாநில நிர்வாகிகள் கூட்டத்திலே ஜெகத்ரட்சகன் அவர்கள் முன்னிலைப்படுத்தபட்டதை தொடர்ந்தும் காங்கிரஸ், மற்றும் திமுக கூட்டணியில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்கள் தொடர்பாக தான் பேச்சுக்கள் எழுந்து வருகின்றன. பாண்டிச்சேரி விவகாரத்தில் கட்சிப் பணிகளை தவிர்த்து திமுக செய்துவருவது தேர்தல் பணிகள் கிடையாது என்று ஸ்டாலின் ஒரு பிரபல பத்திரிக்கைக்கு பேட்டி அளித்து இருக்கிறார்.

ஆனாலும் பாண்டிச்சேரியில் திமுக எடுத்த முடிவை தமிழகத்திலும் எடுத்திட வேண்டும் என்று பல தரப்பினரும் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

நாளைய தினம் திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்க இருக்கின்றது. மொத்தம் இருக்கின்ற 70 மாவட்டச் செயலாளர்களில் 50க்கும் அதிகமானோர் காங்கிரஸ் கூட்டணி தேவை கிடையாது என்ற கருத்தை தெரிவித்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியை நாம் சுமந்துகொண்டு இருக்கவேண்டாம் காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் களத்தில் நாம் இறங்கினோம் ஆனால் நமக்கு அவர்களால் எந்த ஒரு பயனும் கிடையாது என்பதே அவர்களுடைய கருத்தாக இருக்கிறது.

அதற்கு ஒரு காரணமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் அதற்கு குறைந்தபட்சம் 20 முதல் 40 இடங்கள் ஒதுக்கப்படும் சமயத்தில் திமுக போட்டியிட நினைக்கும் தொகுதிகளை அதுவும் திமுகவிற்கு வெற்றிவாய்ப்பு இருக்கும் தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு கேட்டால், திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் தாங்கள் விரும்பும் தங்களுடைய ஆதரவாளர்களுக்கு சீட்டு வாங்கி கொடுக்க இயலாமல் போய்விடும். இந்த முறை தேர்தல் களம் திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்ற காரணத்தால், அந்த சூழலை நாம் காங்கிரஸ் கட்சியிடம் இழந்து விட வேண்டாம் என்று திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூறி வருவதாகவும் அதையே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலினிடம் தெரிவிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

Previous articleதமிழகத்தில் சசிகலாவின் ஆதிக்கத்தை குறைப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி எடுத்த அதிரடி முடிவு! அசந்துபோன சசிகலா தரப்பு!
Next articleவன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடைக்காது -திருமாவளவனின் சர்ச்சை பேச்சு! கண்டனம் தெரிவிக்கும் பாமக தொண்டர்கள் !