மத்திய பிரதேசத்தில் இருக்கும் இந்தூரில் கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் சாக்கில் கட்டி தண்டவாளத்தில் போட்டு சென்றிருக்கிற சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தூரில் வசித்து வரும் 19 வயதான கல்லூரி மாணவியை அவருடைய முன்னாள் காதலன் நந்திகிராமில் இருக்கின்ற ஒரு இல்லத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் அந்த நபரும் அவருடைய நண்பர்களும் இணைந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள்.
இதனை அடுத்து அந்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி, அதோடு சாக்கில் கட்டி அருகே இருக்கின்ற தண்டவாளத்தில் போட்டுவிட்டு அங்கிருந்து அந்த மர்ம நபர்கள் தப்பித்து விட்டார்கள். அந்த வழியே போனவர்கள் அந்த மாணவியை மீட்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள் .அதன் பெயரில் விரைவாக வந்த காவல்துறையினர் அந்த மாணவியை சிகிச்சைக்காக நாக்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள். அந்த மாணவி கொடுத்த வாக்குமூலத்தை வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள் மத்தியபிரதேச காவல்துறையினர்.
இது போன்ற பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் தினமும் நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் இதே போன்று ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற கொடூரர்களை அந்த மாநில காவல்துறை சுட்டுக்கொன்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் அந்த சமயத்தில் என்னதான் அந்த நபர்கள் தவறு செய்திருந்தாலும் அவர்களை கொன்றிருக்க கூடாது என்று அரசியல்வாதிகளும், வழக்கறிஞர்களும் கொந்தளித்து இருந்தார்கள். இப்பொழுது அதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் ஒரு முறை நடந்திருக்கிறது. இதற்கு அந்த அரசியல்வாதிகளும், வழக்கறிஞர்களும் என்ன சொல்லப்போகிறார்கள் என்று பொதுமக்கள் கொந்தளித்து இருக்கிறார்கள்.
காவல்துறையினர் இதுபோன்ற சமூக விரோதிகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கை தொடர்ச்சியாக எடுத்து வந்தாலும் கூட இதுபோன்ற கொடூரமான குற்றச் சம்பவங்கள் குறைவது போல் தெரியவில்லை. ஆகவே அவர்களுக்கு எதிராக சரியான மிகக் கடுமையான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொது மக்கள் ஆதங்கம் தெரிவிக்கிறார்கள்.
ஏற்கனவே இருக்கும் இது போன்ற சமூக விரோதிகளுக்கு எதிரான சட்டங்கள் சரிவர பயன் அளிக்கவில்லை என்றும் சொல்கிறார்கள். அதன் காரணமாக தான் இது போன்ற தவறுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் கூறுகிறார்கள் .ஆகவே அந்த சட்டத்தை திருத்தி தவறு செய்தால் உடனடியாக தண்டனை வழங்குமாறு அந்த சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள்.