கூட்டணி டமால்? கமலஹாசனுக்கு கொக்கி போடும் காங்கிரஸ் கட்சி!

0
204

பாண்டிச்சேரி மாநிலத்தில் திமுக தன்னுடைய கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்திருப்பது மூலமாக அந்த கட்சி தனித்து போட்டியிடப் போவதை உறுதி செய்து இருக்கிறது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிடுவதற்கு தயாராகி இருப்பதாக சொல்கிறார்கள். இந்த நிலையில் தமிழ் நாட்டிலும் காங்கிரஸ் கட்சியானது திமுக கூட்டணியில் இருந்து விலகி மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக சட்ட சபைத் தேர்தலுடன் சேர்த்து புதுவை சட்டசபை தேர்தலும் நடைபெற இருக்கிறது. கடந்த 2006 ஆம் வருட சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மற்றும் திமுக ஆகியவை கூட்டணி வைத்து தேர்தல் களத்தில் நின்றனர். இந்த நிலையில் 30 சட்டசபை தொகுதிகளில் உடைய புதுவை மாநிலம் சட்டசபையில் காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளில் வெற்றி அடைந்து ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் இப்போது தனியாக போட்டியிட்டால் மட்டுமே திமுக ஆட்சியை பிடிக்க இயலும் என்ற முயற்சியில் கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பதற்கு திட்டமிட்டு காய் நகர்த்தி இருப்பதாக சொல்கிறார்கள் .இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் முதலமைச்சர் வேட்பாளராக புதுச்சேரியில் களமிறக்கி இருக்கிறது திமுக. புதுச்சேரியில் நடைபெற்ற திமுகவின் தேர்தல் ஆலோசனையின் போது உரையாற்றிய ஜெகத்ரட்சகன் புதுவையில் 30 இடங்களிலும் வெற்றி பெற்று திமுக ஆட்சியை பிடிக்கும் .அவ்வாறு இல்லை என்றால் இந்த மேடையிலேயே என்னுடைய உயிரை போக்கிக் கொள்வேன் என்று தெரிவித்தது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுச்சேரியில் முதலமைச்சர் வேட்பாளரை தன்னிச்சையாக அறிவிப்புடன் மூலமாக காங்கிரஸ் கட்சியை வெறுப்பேற்றி கழட்டிவிட்டு இருப்பதாக சொல்கிறார்கள். இதன்காரணமாக, கடுப்பாகி இருக்கின்ற காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் நாங்களும் தனித்து போட்டியிடுவதற்கு தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்து இருக்கிறார்கள் திருப்பூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே. எஸ். அழகிரி புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிட தயாராக இருக்கிறது என்று தெரிவித்தார் .இதற்கு இடையே திமுக மற்றும் காங்கிரஸ் இடையே புதுச்சேரியில் ஏற்பட்ட கூட்டணி பிளவு தமிழ்நாட்டிலும் எதிரொலிக்க ஆரம்பித்தது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி திமுக தவிர்த்து விட்டு மற்ற கட்சிகளுடன் ஒன்றிணைந்து போட்டியிட தயாராக வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்து வருகிறார்கள் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியுடன் காங்கிரஸ் தேர்தலை சந்திக்க தயாராக வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே. எஸ் அழகிரி கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி ஏற்றுக் கொள்வதில் எங்களுக்கு எந்தவித சிக்கலும் கிடையாது என்று தெரிவித்திருக்கிறார்.

திமுக 200 இடங்களில் போட்டியிடும் என்று தெரிவித்து இருக்கின்ற ன் நிலையில் , தொகுதி பங்கீடு செய்யும் போது தங்களுக்கு போதுமான இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்ற காரணத்தால், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிடும் என்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக தமிழ்நாட்டிலே காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் இடையே இருக்கின்ற கூட்டணி பிளவுபடும் நிலையில் இருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

Previous articleவிவசாயிகள் போராட்டத்திற்கு செவிசாய்த்த மத்திய அரசு! காரணம் என்ன தெரியுமா?
Next articleசசிகலாவின் மூச்சுத்திணறல்! டெல்லி வரை சென்ற டிடிவி தினகரன்!