திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது மழை வெள்ளத்தின் போது பாதிப்படைந்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை, நிவாரணத்தொகை, போன்றவற்றை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய ,மாநில, அரசுகள் ஆலோசனை செய்ய வேண்டும் மழைநீர் செல்வதற்கான வடிகால் அமைக்கப்படாமல் இருக்கும் காரணத்தால், மாநிலத்தில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனை தவிர்க்கும் முயற்சியை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றோரின் உண்மையான தொண்டர் தான் ஸ்டாலின், கருணாநிதியை தன்னுடைய தலைவராக நினைத்தவர் எம்ஜிஆர் அதன்காரணமாக, அவர் பெயரை ஸ்டாலின் தெரிவிப்பதில் எந்த ஒரு தவறும் கிடையாது. வாக்குகளை பெறுவதற்காக ஸ்டாலின் அவர்கள் எம்ஜிஆரின் பெயரை தெரிவிக்க வில்லை அவருடைய திரைப்படங்களை ஒரு ரசிகராக பார்த்திருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின் என்று கூறினார் கனிமொழி.
அதிமுகவை பற்றி பேசுவதற்கு எதுவும் கிடையாது. டெல்லியில் சென்று ஆலோசனை செய்து அதன் பிறகு சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. இது போன்ற விஷயங்களை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் இந்த சிறிய விஷயத்திற்கு கூட டெல்லி வரை சென்று அனுமதி பெற்று, அதன் பிறகு அறிவித்திருக்கிறார்கள் இதிலிருந்தே தமிழகத்தின் ஆளும் கட்சி டெல்லியில் இருக்கக்கூடிய பாஜகவிற்கு எந்த அளவிற்கு கைப்பாவையாக இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் கனிமொழி.
வார்த்தைக்கு, வார்த்தை மேடைக்கு ,மேடை இது அம்மாவின் அரசு, அம்மாவின் அரசு, என தெரிவித்துவரும் எடப்பாடி பழனிச்சாமி அந்த ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கக்கூடிய சந்தேகங்களை தீர்ப்பதற்கு கூட தயாராக இல்லை. ஏதோ பெயருக்கு ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு அது தற்போது கிடப்பில் போடப்பட்டு விட்டது. இதெல்லாம் யாரை ஏமாற்றுவதற்காக செய்யும் செயல் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதோடு எதிர்வரும் தேர்தலில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது சுமார் 200 இடங்களுக்கு அதிகமாக நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கனிமொழி உறுதிபட தெரிவித்து இருக்கிறார்.