வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு தர மறுக்கும் தமிழக அரசு! 90 தொகுதிகளில் தனித்து களமிறங்க முடிவு செய்த பாமக
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய சமூகமான வன்னியர் சமுதாயம் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு மட்டும் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப சுமார் 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கேட்டு சுமார் 40 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள்.
1980 களில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு போராடினார். ஆனால் வன்னியர்களுக்கு மட்டும் தனி இட ஒதுக்கீடு தராமல் எம்.பி.சி என்ற புதிய பிரிவை உண்டாக்கி அதில் 108 சாதிகளை சேர்த்து 21% இட ஒதுக்கீடு 1987 கருணாநிதி ஆட்சியில் தந்தார்கள்.
ஆனால் வன்னியர் சமுதாயம் கேட்ட தனி இட ஒதுக்கீடு கிடைக்கவே இல்லை, பிறகு பல்வேறு முறை தமிழக அரசுக்கு பாமகவினர் தனி இட ஒதுக்கீடு கேட்டு கோரிக்கை வைத்தாலும் அதை எந்த அரசும் நிறைவேற்றவே இல்லை.
தற்போது மீண்டும் பாமக வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு கூட்டணியில் இருக்கும் அதிமுக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். கோரிக்கை வைத்ததோடு இல்லாமல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை ஐந்து கட்டங்களாக பல்வேறு விதங்களில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
ஆனால் அதிமுக அரசு வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுத்தால் மற்ற சமூகங்களில் வாக்கு கிடைக்காது என்று பயந்து வன்னியர்களின் தனி இட ஒதுக்கீடு கோரிக்கை நிராகரித்தது. இதனால் வேறு வழியில்லாமல் மருத்துவர் ராமதாஸ் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடுயாவது தாருங்கள் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கோரிக்கையும் அதிமுக அரசு ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து தாமதித்து வருவதாக வேதனையோடு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தராத தமிழகம் சமூகநீதியின் தொட்டிலாம்! என்று பதிவிட்டுள்ளார்.
வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு கூட தர தாமதிப்பதால் பாமக பலமாக உள்ள 90 தொகுதிகளின் பட்டியலை தயார் செய்துள்ளதாம்.அதில் A,B,C என்று மூன்று பிரிவுகளாக பிரித்து A பிரிவில் உள்ள 30 தொகுதியில் தீவிரமாக களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வெற்றி பெற திட்டம் தீட்டியுள்ளார்களாம்.
அந்த தொகுதிகளின் விவரம் இதோ பாப்பிரெட்டி, பெண்ணாகரம், தர்மபுரி, எடப்பாடி, ஜெயங்கொண்டம்,மேட்டூர், ஓமலூர்,கும்முடிப்பூண்டி, விக்கிரவாண்டி,சங்ககிரி,செய்யாறு, குன்னம்,விழுப்புரம்,ஆற்காடு, புவனகிரி,திருவள்ளுர், பாலக்கோடு, காஞ்சிபுரம், சேலம் மேற்கு, திண்டிவனம், விருதாச்சலம், திருத்தணி, செஞ்சி, திருப்போரூர் ,அரூர், காட்டுமன்னார்கோயில், மயிலம், அணைக்கட்டு ,வானூர் ஆகிய தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள பாமகவினர் திட்டமிட்டு வருகின்றனர் என கூறப்படுகிறது.