பிரசவத்திற்குப் பின்னர் கடும் பனி காரணமாக வீட்டிற்கு செல்ல இயலாமல் தவித்த பெண்ணை 6 கிமீ தூரம் தூக்கிச் சென்று வீடு சேர்த்த ராணுவ வீரர்கள்!

0
129

தற்போது காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக முக்கிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் மூடி வைக்கப்பட்டுள்ளன. அதிக அளவு பனிப்பொழிவு நிகழ்வதால் காஷ்மீர் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

இந்த கடும் பனிப்பொழிவு காரணமாக காஷ்மீரில் ரயில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பனிபொழிவு காரணமாக விமானங்கள் அனைத்தும் தாமதமாகவே தரையிறங்கியது.

தற்போது எதிரில் இருப்பது கூட சரியாக தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு நிலவுவதால் விமான சேவை அங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் ஒரு பெண், பிரசவத்திற்குப் பின்னர் கடும் பனிப்பொழிவு காரணமாக வீடு திரும்ப இயலாமல் தவித்துள்ளார்.

அப்பெண்மணியை 6 கிலோமீட்டர் தூரம் ஸ்டெச்சரில் வைத்தவாறு தூக்கிச் சென்று பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் வீடு சேர்த்த ராணுவ வீரர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Previous articleஅதிருப்தியில் உள்ள பாமகவை திமுக கூட்டணிக்கு இழுக்க புதிய வியூகம்
Next articleசீனாவிடம் கொரோனா தடுப்பு மருந்து வாங்க மறுத்த வங்கதேசம் – ஏன் தெரியுமா?