விடாது கருப்பு! கமலை விடாமல் துரத்தும் காங்கிரஸ் கட்சி!

0
165

சிவகங்கை பாராளுமன்ற தொகுதி எண் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சிதம்பரம் காரைக்குடியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சமயத்தில் அவர் பேசுகையில் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள் என்று சட்டத்தின்படி நிரூபணம் ஆனவர்களை இங்கே யாரும் கதாநாயகர்களாக சித்தரிக்க முயற்சி செய்ய வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் உயிரிழந்த மற்ற தமிழர்கள் தொடர்பாக யாரும் எதுவும் பேசுவது கிடையாது. இந்த விவகாரத்தில் தண்டனை அடைந்தவர்கள் சட்டரீதியாக விடுதலை அடைந்தால் அதில் எந்த ஒரு மனக்கசப்பு ஆட்சபணையும் கிடையாது. காவல் துறையிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக திட்டம் தீட்டுவார்கள் சட்டத்திலிருந்து தப்பிப்பதற்காக பாஜகவிடம் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த விவகாரத்தில், அனைவருக்கும் பாரதிய ஜனதா கட்சி விளக்கத்தைக் கொடுக்க வேண்டும். மக்கள் நீதி மையத்தின் சித்தாந்தம் மற்றும் கொள்கை எல்லாம் மதச்சார்பின்மையை சார்ந்துதான் இருக்கின்றது. ஆகவே கமல்ஹாசன் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக்கு வரவேண்டும் என்று நான் விருப்பப்படுகிறேன். இந்தத் தேர்தலில் கமல்ஹாசன் தனியாக நிற்பார் ஆனால் அவருக்கு அதிக வாக்குகள் கிடைக்கும். அதனைத் தொடர்ந்து அவர் அரசியலில் நீடிக்க வேண்டுமென்றால் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். மற்ற கட்சிகள் மீது இருக்கின்ற கோபம் காரணமாகவே மக்கள் அனைவரும் நோட்டாவிற்கு பதில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து இருக்கிறார்கள் .மக்களவை தேர்தலை போல ,இந்த சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணி பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்றி அடையும் என்று தெரிவித்தார் கார்த்திக் சிதம்பரம்.

சென்ற சில தினங்களுக்கு முன்பு திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு கமல்ஹாசன் வரவேற்க படுகிறார் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்திருந்தார் .இந்த நிலையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருக்கிறார் கமல்ஹாசன் காங்கிரஸ் கூட்டணிக்கு வரவேண்டும் என்ற விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது

Previous articleகுடியரசு தின விழா நிகழ்வில் பங்கேற்கும் நீலகிரி பழங்குடியினர் தம்பதிகள்! மத்திய அரசு செய்த அசத்தல் ஏற்பாடு!
Next articleசானிடைசரை பயன்படுத்தினால் கண்பார்வை போகும் அபாயம்:! எச்சரிக்கும் வல்லுநர்கள்!