இந்திய நாட்டின் 62வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது அதில் முதல் முறையாக ஒரு விமானம் பங்கேற்று ராஜபாதை மீது சாகசம் செய்து காட்டியது அதேபோல முதல் முறையாக இந்த குடியரசு தின விழாவின் அணிவகுப்பில் பங்களாதேஷ் நாட்டின் ராணுவ வீரர்களும் பங்கேற்றார்கள்.
இதுவரையில் எந்த ஒரு குடியரசு தின விழா அணிவகுப்பில் இல்லாத அளவிற்கு இந்த வருடம் குடியரசு தின விழாவில் மிகச் சிறப்பான அம்சங்கள் இடம் பிடித்திருந்தன .கொரோனா காரணமாக இதுவரையில் இல்லாமல் முதல் முறையாக குடியரசு தின விழாவில் எந்த ஒரு சிறப்பு விருந்தினரும் பங்கேற்காமல் இந்த குடியரசு தினவிழா அணிவகுப்பு நடைபெற்றிருக்கிறது. இதற்கு முன்னதாக 1952 மற்றும் 1953 அதோடு 1966 போன்ற வருடங்களில் இதேபோல எந்த ஒரு சிறப்பு விருந்தினரும் இல்லாமல் குடியரசு தின விழா நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந்த குடியரசு தின விழாவின் அணிவகுப்புடைய சிறப்பம்சமாக இந்தியாவில் இருக்கக்கூடிய முப்படைகளின் வலிமையையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் ,பல சாகசங்கள் நிகழ்த்தப்பட்டன .அந்த விதத்தில் விமானப்படையின் திரினேத்ரா உருவாக்கம் செய்து கட்டப்பட்டது. இந்த முறையானது திரிசூல வியூகம் எனவும் அழைக்கப்படுகின்றது. இதில் முதன்முதலாக இந்திய நாட்டின் ரபேல் போர் விமானம் இடம்பெற்றது. கூடுதல் சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது .சென்ற வருடம் ரபேல் ரக போர் விமானத்தின் முதல் தொகுதி விமானப்படையில் இணைத்து வைக்கப்பட்டது. அதன் காரணமாக ரஃபேல் விமானங்கள் வானில் சாகசங்களை செய்து காண்பித்தனர். அந்த விமானத்தின் சாகசம் ஆனது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
சுமார் 300 மீட்டர் உயரத்தில் 780 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த சாகசங்கள் செய்து காட்டப்பட்டன. விமானப்படையின் சாகச நிகழ்வுக்கு ரோகித் கட்டாரியா தலைமையேற்றார். அதேபோல இந்த அணிவகுப்பின் இன்னொரு சிறப்பு அம்சமாக பார்க்கப்பட்ட அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில், பங்களாதேஷ் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதற்கு பங்களாதேஷ் ராணுவத்தில் லெப்டினன்ட் கேணல் முகமது தலைமை ஏற்றார். இந்தியாவின் குடியரசு தின விழாவில் கொண்டாட்டத்தில் பங்களாதேஷ் ராணுவம் பங்கேற்று இருப்பது இதுதான் முதல் முறை. இந்த குழுவில் மொத்தமாக 122 வீரர்கள் இடம் பெற்றிருந்தார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல இந்த குடியரசு தின விழாவில் முதல் முறையாக யூனியன் பிரதேசத்தின் அந்தஸ்தைப் பெற்ற இருக்கிற லடாக் மாநிலத்தின் கலை கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் போன்றவற்றை உலகறியும் நீளமாக அதனுடைய கலாச்சார அணிவகுப்பும் இடம்பெற்றிருந்தது. அதேபோல குடியரசு தின விழாவின் ஆரம்பமாக இந்தியா கேட்டில் இருக்கின்ற தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் நரேந்திர மோடி வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்தார் .அந்த சமயத்தில் ஜாம்நகர் அரச குடும்பத்தார் பரிசாக அளிக்கப்பட்ட தலைப்பாகையை அவர் அறிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.