திறக்கப்பட்டது ஜெயலலிதாவின் பீனிக்ஸ் பறவை வடிவிலான நினைவிடம்! முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்பு!

0
249

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில், திறந்து வைத்திருக்கிறார்.

சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் ரூபாய் 57.8கோடி ரூபாய் செலவில் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை போல வடிவமைக்கப்பட்டு அறிவுத்திறன் பூங்கா கருங்கல்லால் வடிவமைக்கப்பட்ட பொது நடைபாதை புல்வெளியில் மற்றும் நீர் தடாகங்கள் போன்றவற்றை அழகாக அமைத்திருக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகள் மக்களுக்கு அவர் செய்த சேவைகள் ,மற்றும் காணொளி மற்றும் ஆடியோ புகைப்படங்கள் அதோடு ஜெயலலிதா படித்த நூல்கள் போன்றவற்றை டிஜிட்டல் முறையில் வடிவமைத்து வைத்திருக்கிறார்கள்.

இப்படி சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் இன்று காலை 11 மணி அளவில் திறந்துவைக்கப்பட்டது. நினைவிடத்தை தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்க, தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அதோடு அதிமுக தொண்டர்கள் போன்றோர் பங்கேற்று கொண்டார்கள்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கடி உபயோகப்படுத்தும் மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற வாசகம் அவருடைய நினைவிடத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் செய்யப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு செய்து இருக்கின்றார்.

இவ்வளவு அருமையாக செய்யப்பட்டிருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை பிரதமர் நரேந்திர மோடி, இல்லையென்றால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரின் எவரேனும் ஒருவரை வைத்து இந்த மணிமண்டப திறப்பு விழாவை நடத்துவது என்று அதிமுக சார்பாக முடிவு செய்யப்பட்டது இதற்காக சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்குச் சென்று வந்தார்.

ஆனாலும் பாஜகவிலிருந்து எந்த ஊரு இசையும் கொடுக்கப்படவில்லை என்ற காரணத்தால் ,முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றிணைந்து அந்த நினைவிடத்தை திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.

Previous articleஅரசியல் அனாதையான நாராயணசாமி! புதுச்சேரி அரசு விரைவில் டிஸ்மிஸ்?
Next articleசிறை வாசம் முடிந்தது விடுதலையானார் சசிகலா! மூன்றாம் தேதி தமிழகம் திரும்ப ஆயத்தம்!