முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது! ஜெயலலிதாவின் நினைவு இல்லம்!

0
128

சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அந்த நினைவு இல்லத்தை சற்று முன் திறந்து வைத்திருக்கிறார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இயற்கை எழுதியதை தொடர்ந்து, அவர் வாழ்ந்த சென்னை போயஸ் தோட்டம் பகுதியில் இருக்கின்ற வீட்டை அவருடைய நினைவு இல்லமாக மாற்றப்படுகிறது, என்று 2017ஆம் தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியானது. இதனைத்தொடர்ந்து போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்க, தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் என்று பலரும் திரளாக பங்கேற்றார்கள். இல்லம் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

கொரோனா தொற்றை மனதில் வைத்து வேதா இல்லம் இருக்கும் பகுதி முழுவதிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தமிழக அரசின் சார்பாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

Previous articleபிப்ரவரி 2ஆம் தேதி கூடுகிறது! நடப்பு சட்டசபையின் கடைசி கூட்டத்தொடர்!
Next articleபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு! மேலும் ஒரு பெண் ரகசிய வாக்குமூலம்!