அதிமுகவைச் சேர்ந்தவர்கள் யார் இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்துவிட்டது என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்திருக்கிறார்.
அதிமுகவில் உறுப்பினர் அட்டையை சசிகலா அவர்கள் புதுப்பிக்கவில்லை அதிமுகவில் அவர் உறுப்பினராகவே இல்லாதபோது கட்சிக் கொடியை பயன்படுத்த எவ்வாறு இயலும் என்று சமீபத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிமுகவின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் டிஜிபியிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள் ஆனாலும் சசிகலா தரப்பு முப்படைத் தளபதிகளும் புகார் கொடுத்தாலும் கூட அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா மட்டுமே அவர் கட்சி கொடியை பயன்படுத்தும் உரிமை அவருக்கு இருக்கிறது என்று தெரிவிக்கிறது.
இதனையடுத்து சென்னையில் போரூர் முதல் 12 பகுதிகளில் சசிகலாவிற்கு வரவேற்பு கொடுப்பதற்கு அனுமதி வேண்டும் என்று தெரிவித்து அமமுக நிர்வாகி செந்தமிழன் காவல்துறையில் மனு அளித்தார். ஆனாலும் சென்னை காவல் துறையினர் இதற்கு அனுமதி வழங்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று மறுபடியும் டிஜிபி அலுவலகத்திற்கு அமைச்சர்கள் சி.வி சண்முகம் மற்றும் தங்கமணி ஜெயக்குமார் அதோடு அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் போன்றோர் போய் இருக்கிறார்கள் அங்கு சசிகலா மற்றும் தினகரனுக்கு எதிராக டிஜிபியிடம் மறுபடியும் ஒரு புகார் மனுவை கொடுத்திருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் சசிகலா சென்னை திரும்பும் காரணத்தால், எங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் கிடையாது சசிகலா அதிமுகவின் கொடியை பயன்படுத்துவதை யாராலும் தடுத்துவிட முடியாது என்று தினகரன் சவால் விடுத்து இருக்கிறார். சசிகலா ஆதரவாளர்கள் தற்கொலைப் படையாக மாறப் போவதாக மிரட்டல் விடுத்து வருகிறார்கள். சசிகலா ஆதரவாளர்கள் தமிழ் நாட்டில் கலவரம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார் அமைச்சர் சி.வி. சண்முகம்.
அதோடு தமிழ்நாட்டின் கலவரத்தை ஏற்படுத்துவதற்கு தினகரன் போன்றோர் சதிச் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிமுக யார் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதையும் இரட்டை இலைச் சின்னம் யாருக்கு சொந்தம் என்பதில் உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு கூறியிருக்கிறது. முதல்வர், மற்றும் துணை முதல்வர், அதோடு மதுசூதனன் நிர்வாகிகளாக இருக்கும் கட்சிதான் அதிமுக என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியிருக்கிறது. ஊரைக் கொள்ளையடித்து சொத்து சேர்த்த வழக்கில் நான்கு வருட காலம் சிறையில் இருந்தார் சசிகலா என்று அமைச்சர் விமர்சனம் செய்திருக்கிறார்.
சசிகலா தொடர்ந்து இருக்கும் வழக்கில்தான் உச்சநீதிமன்றம் அதிமுக யாருக்கு உரித்தானது என்று தீர்ப்பு கூறியிருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் விதமாக சசிகலா செயல்படுகிறார். சசிகலா தமிழ்நாட்டிற்கு வரும்போது கலவரத்தை தூண்டிவிட்டு அதிமுக மீது பழி போட அவர் திட்டமிட்டு இருக்கிறார் .கலவரத்தை தூண்டுவதற்கு முயற்சி செய்யும் தினகரன், மற்றும் சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து டிஜிபியிடம் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது .அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா கிடையாது. அதிமுகவின் கொடியை பயன்படுத்துவதற்கும் சசிகலாவுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை. சசிகலாவை அதிமுகவில் உறுப்பினர்கள் கூட இல்லாமல் இருக்கும் நிலையில், அவர் எப்படி கொடியை பயன்படுத்த இயலும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.