சொத்தால் வந்த வினை! அண்ணனுக்குஎமனான தம்பி!

0
184

சென்னை கொளத்தூர் காமராஜர் நகர் முதல் தெரு விசாரணை அண்ணன் தம்பிகளான பழனி,மற்றும் தமிழ்ச்செல்வன், இருவரும் அவர்களுடைய சொந்த வீட்டில் வசித்து வருகிறார்கள். பழனிக்கு கல்யாணம் ஆகி இரு குழந்தைகள் இருக்கிறார்கள் .தமிழ்ச்செல்வனுக்கு எட்டு வருடங்களுக்கு முன்பே திருமணமாகி நான்கு வருடங்களுக்கு முன்பு விவாகரத்து ஆன நிலையில், தனிமையில் இருந்து வருகிறார். இதன் காரணமாக அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்திருக்கிறார்.

சொத்துப் பிரச்சனையில் அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு உண்டாகி வந்திருக்கிறது. இந்த நிலையில், அந்த சொத்து தகராறு பெரிதாகி இருக்கிறது தமிழ்ச்செல்வன் தன்னுடைய சகோதரர் பழனியை கத்தியால் வலது பக்க மார்பில் சரமாரியாக குத்தி இதில் பழனி அந்த சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பிறகு தமிழ்ச்செல்வன் கொளத்தூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்து இருக்கிறார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட பழனியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து தமிழ்செல்வன் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Previous articleசொன்னதை செய்த ஈபிஎஸ்! வெறுப்பில் எதிர்க்கட்சித் தலைவர்!
Next articleஇந்த ராசிகாரர்கள் இன்று வாயை கட்டுப்படுத்துங்கள்! இன்றைய ராசி பலன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here