மனிதர்களே இல்லாமல் நடக்கும் டீ கடை! அதிகரிக்கும் கூட்டம்!

0
187
Tea shop without people! Increasing crowd!
Tea shop without people! Increasing crowd!

மனிதர்களே இல்லாமல் நடக்கும் டீ கடை! அதிகரிக்கும் கூட்டம்!

துபாயின் ஒரு பகுதியில் மனிதர்கள் இல்லாமல் தேநீர் கடை ஒன்று நடந்து வருகிறது.ரோபோ இயந்திரங்கள் இக்கடையை நடந்துகின்றன.துபாய் மக்களிடையே இந்த கடை அதிக வரவேற்பை பெறுகிறது.இந்த தேநீர் கடைக்கு வருபவர்கள் அவரவர் விருப்பதை அங்கே  கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில் டச் செய்ய வேண்டும்.

அதன் பிறகு,அந்த ரோபோ இயந்திரம் அவர் கேட்ட தேநீரை அதுவே தயார் செய்து அவர் இருக்கும் இடத்திற்கு சென்று தருகிறது.இதனால் மக்கள் அதிகம் கவரப்படுகின்றனர். இக்காரணத்தினால் இந்த தொழில்நுட்பமானது துபாய் மக்களிடயே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.இந்த கொரோனா காலக்கட்டத்தில் மக்களிடையே அதிக அளவில் நோய் பரவுகிறது.இந்த ரோபோ இயந்திரங்களின் மூலம் அதைக் கட்டுப்படுத்தலாம் என்ற கருத்தும் பரவி வருகிறது.

ஆனால் நமது நாட்டில் இந்த தொழில் நுட்பம் வருமாயின் சிறு தொழில் செய்யும் தேநீர் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleசினிமா கதையை திருடுவது போல நாட்டுபுறப்பாடலை திருடியதாக செந்தில் ராஜலட்சுமி தம்பதி மீது குற்றசாட்டு
Next articleபிப்ரவரி 14 ஆம் தேதி லாக் டவுன்? தமிழக முதல்வர் அதிரடி